என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபசாரம் செய்த புரோக்கர் கைது"

    • புளியம்பட்டியை சேர்ந்த ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.
    • அப்போது அங்கு வந்த ஒரு நபர் உல்லாசமாக இருக்க ரூ.1000 கொடுத்தால் அழைத்து செல்வேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒரு நபர் தன்னிடம் ஏராளமான பெண்கள் இருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ.1000 கொடுத்தால் அழைத்து செல்வேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதையடுத்து அவர் புளியம்பட்டிபோலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பகவதியம்மாள், ரத்தினம், மற்றும் போலீசார் விரைந்து சென்று விபசாரத்துக்கு அழைத்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள இடுவட்டி,தொட்டன்னியை சேர்ந்த இளங்கோ (36) என்பதும் டிரைவர் என்றும் தெரியவந்தது.

    மேலும் இவர் புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவில்அருகில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வருவது தெரியவந்தது.

    இதையடுத்து புரோக்கர் இளங்கோவைகைது செய்தனர். மேலும் திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியை சேர்ந்த அழகியை மீட்டனர்.

    ×