என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலங்கார பொருட்கள்"

    • ஈரோட்டில் ‘ஸ்டார்’, அலங்கார தோரணங்கள், பரிசு பொருட்கள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது
    • நண்பர்கள், உறவினர்கள், சிறுவர் சிறுமிகளுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்

    ஈரோடு,

    கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந்தேதி கொண் டாடப்படுகிறது.

    இதையொட்டி ஈரோட்டில் 'ஸ்டார்', அலங்கார தோரணங்கள், பரிசு பொருட்கள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.

    கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி ஈரோட்டில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில் அலங்காரங்கள், தோரணங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்டப்பட்டு உள்ளன.

    வருகிற 2023-புத்தாண்டு பிறக்கும் வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசலிலும் 'ஸ்டார்கள்' அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளில் வண்ண அலங்கார தோரணங்கள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அழகிய சீரியல் விளக்குகள் பொருத்தி அழகு படுத்தி வருகிறார்கள்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நண்பர்கள், உறவினர்கள், சிறுவர் சிறுமிகளுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்.

    ×