பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வருகிறதுஅணைக்கு நீர்வரத்துகுறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது
பவானிசாகர் அணையில் இருந்து  தண்ணீர் திறப்பு குறைப்பு
Published on

ஈரோடு,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடு வெனஉயர்ந்து வந்தது.

இதையடுத்து அணைக்கு வந்த உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க ப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 104.72 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 1255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுஇருந்தது.

இதே போல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. தற்போது கால்வாயில் 500 கனஅடியும், பவானி ஆற்றில் 500 கனஅடியும் என மொத்தம் 1000 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நீர்வரத்துகுறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com