பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
Published on

புஞ்சை புளியம்பட்டி:

புஞ்சை புளியம்பட்டி ஆதிபரா சக்தி கோவில் அருகே செயல்படாமல் உள்ள தனியார் நூல்மில் குடோனில் சூதாட்டம் நடைபெறுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவயிடம் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த இம்தியாஸ், தனசேகர், அமீர், ஜான் தேவராஜ், கண்ணன், கோகுல், ராஜேஷ்குமார், சசிகுமார் ஆகிய 8 பேர் என்பதும், இவர்களை சூதாட மில் காவலாளி பிரகாஷ் அனுமதித்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரம், 10 செல்போன்கள், 4 மோட்டார்சைக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com