மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

ராமு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து செல்வியின் தலை உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார்.இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
Published on

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அருகே உள்ள 60 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமு (40). இவர் ஈரோடு மாநக ராட்சி 3-வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி செல்வி (34). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் செல்வி க்கும் மற்றொரு வாலிப ருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராமு அவரது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உற வினர்கள் கணவன்- மனைவிக்கு இடையே சமா தானம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் செல்வி க்கும் மற்றொருவருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதனால் ராமு மனைவியை கண்டித்தார். இதை தொட ர்ந்து அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் 60 வேலம் பாளையம் சென்று பொருட்களை வாங்கி கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபம் அடைந்த ராமு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து செல்வியின் தலை, கழுத்து, முதுகு, கை உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

இதையடுத்து ராமு அங்கு இருந்து சென்று தலைமறைவாகி விட்டார். இதில் செல்வி படுகாயம் அடைந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்வியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com