மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்து தொழிலாளி பலி

ரங்கசாமி வீட்டில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.
மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்து தொழிலாளி பலி
Published on

ஈரோடு:

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அடுத்த தொண்டூர் செங்காடு பகுதி யை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 57). கூலி தொழிலாளி. இவருக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரங்கசாமி கடந்த 3 நாட்களாக வேலை க்கு செல்லாமல் வீட்டிலேயே மது குடித்து வந்தார்.

இதை தொடர்ந்து மது குடிக்க பணம் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்த தாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ரங்கசாமி வீட்டில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி லட்சுமி அவரிடம் விசாரித்தார்.

அப்போது மது குடிக்க பணம் இல்லாத தால் வாழ பிடிக்கவில்லை. எனவே மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.

இதை அடைத்து அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரி தாபமாக இறந்தார். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com