search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திடக்கழிவு மேலாண்மை சுகாதார கூடத்தை இடிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
    X

    திடக்கழிவு மேலாண்மை சுகாதார கூடத்தை இடிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

    • திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • இதனை அறிந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து உள்ளே செல்ல விடாமல் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தடுத்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் சோலார் அருகே உள்ள 46 புதூர் ஊராட்சி பிரியா பாறை அருகில் ஊராட்சிக்கு சொந்தமான 96 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

    இந்த இடத்தில் கடந்த 2007-ல் அப்போதைய மாவட்ட கலெக்டர் உதயசந்திரன் சுகாதார இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை திறந்து வைத்தார்.

    இதனையடுத்து 46 புதூர் பஞ்சாயத்து முழுவதும் உள்ள 10 ஆயிரம் குடும்பங்களில் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தில் கொட்டப்பட்டு, அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த பகுதி ஊராட்சிக்கு ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் கடந்த 15 ஆண்டுகளாக பிரச்சனை இல்லாமல் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வந்தனர்.

    இந்நிலையில் குப்பை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் தர்மலிங்கம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடிக்க பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ேநற்று மாலை 3 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இதனை அறிந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து உள்ளே செல்ல விடாமல் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தடுத்தனர்.

    அப்போது நீதிமன்ற அட்வகேட் கமிஷனரிடம் ஊராட்சிக்கு வேறு பகுதியில் இடம் கொடுத்து விட்டு தற்பொழுது இயங்கும் திடக்கழிவு கூடாரத்தை இடித்து அகற்றுங்கள் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும் ஊராட்சிக்கு வேறு எங்கும் குப்பை கொட்ட இடம் இல்லாததால் அதே இடத்தை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

    தவிர தற்பொழுது இயங்கும் கூடாரத்தை இடித்து அகற்றினால் ஊராட்சி முழுவதும் குப்பைகள் தேங்கி, குப்பை கள் அகற்ற முடியாமல் குப்பை காடாக மாறிவிடும். நோய் தொற்று அதிகரிக்கும். சுகாதாரம் சீர்குலைந்து விடும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் தர்மலிங்கம் பொதுமக்களின் கருத்தை ஆய்வு செய்வதாக தெரிவித்து சென்றார். இதனால் 46 புதூர் ஊராட்சியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×