என் மலர்
ஈரோடு
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் முதல் விதிப்படி பணி செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
- இதில் 732 பேர் ஈடுபடுகிறார்கள்.
ஈரோடு:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று முதல் விதிப்படி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டம் வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு இரவு நேர ஆய்வு கூட்டம், விடுமுறை நாளில் கள ஆய்வுக்கு அழைப்பதை கைவிட வேண்டும். அனைத்து வட்டாரத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பிற துறை பணிகளில் ஈடுபடும் போது இத்துறை க்கான பணிகளை செய்ய முடியவில்லை. இவற்றை கைவிட வலியுறுத்தி ஏற்க னவே 3 கட்ட போராட்டம் நடத்தினோம்.
கூடுதல் கலெக்டர் பேச்சு வார்த்தை யை ஏற்று போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் 5 அலுவலர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையாக சார்ஜ் வழங்கி உள்ளனர்.
எனவே விதிப்படி வேலை என்று கோரிக்கை யை வலியுறுத்தி போராட்ட த்தை தொடங்கி உள்ளோம். வரும் 9-ந் தேதி வரை இந்த போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும்.
இதில் 732 பேர் ஈடுபடுகிறார்கள். பணி நேரத்துக்கு பின் நடக்கும் ஆய்வு கூட்டம், காணொளி கூட்டங்கள், கள ஆய்வுகளை தவிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது.
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்ட த்தின் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டியது. தொட ர்ந்து மழை குறைந்தது. ஆனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது.
மாவடடத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வரு கிறது. மேலும் பனி மூட்ட மாக காணப்பட்டு வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வருகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள வனப்பகுதிகளான தாள வாடி, கேர்மாளம், ஆசனூர், பண்ணாரி, தலமலை உள்பட பல்வேறு கடும் பனி மூட்டமாக இருந்து வருகிறது.
இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வருகிறது.
இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடி யாமல் கடும் அவதி அடைந்து வருகிறா ர்கள். அதிகாலையி ல் வேலைக்கு செல்லும் கிராம மக்கள் கடும் குளிரால் வெளியே வர தயக்கம் காட்டி வரு கிறார்கள்.
மேலும் பலர் ஸ்சுவட்டர், குல்லா அணிந்த படியே வருகிறார்கள். மேலும் வனப்பகுதி களில் கடும் பனி பொழிவு பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டப்படியே செல்கிறார்கள்.
மேலும் கோபிசெட்டி பாளையம், நம்பியூர், சென்னிமலை, பெருந்துறை, கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இன்று காலை வரை கடும் பனி பொழிவு பொழிந்து வருகிறது.
அதே போல் அந்தியூர் அடுத்த பர்கூர், தாமரை க்கரை, தட்டக்கரை போன்ற மலைப்பகுதியில் இன்று காலை பனி பொழிவு காரண மாக கடும் குளிர் வாட்டியது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். மேலும் பனியால் குளிர் வாட்டியது.
இதனால் பெரும்பாலான பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் குளிரால் குல்லா அணிந்தபடியே வந்தனர்.
சென்னிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வழக்கத்தை விட கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
காலை சூரிய உதயத்தை கடந்தும் 8 மணி வரை பனிப்பொழிவு தொடர்வதால் காலை நேரத்தில் வேலைக்கு, தொழிற்சாலைக்கும், கைத்தறிநெசவுத் தொழிலுக்கும், விசைத்தறி குடோனுக்கு, நெசவு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், அதிகாலை நடைப்பயிற்சி செய்வோர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதனால் வெளியில் செல்லும் பெரும்பாலானோர் குல்லா, ஸ்வெட்டர் அணியும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றும் அதிகாலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவும், குளிர் நடுக்கம் இருந்தது.
- தீ மளமள வென பரவி அருகில் இருந்த பழனியம்மாள், பச்சமுத்து ஆகியோரின் 2 வீடுகளிலும் பற்றி கொண்டது.
- தீ விபத்தில் வீடுகளிலும் இருந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம், நாகிரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (80). அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் குலசேகரன் (43), பச்சமுத்து (60).இவர்களுடைய 3 வீடுகளும் தகரம் வேயப்பட்ட கூரை வீடாகும்.
இந்நிலையில் குணசேகரன் வீட்டில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனால் அவரது குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டவாறு வெளியே ஓடி வந்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது தீப்பிடித்து வீடு எரிந்து கொண்டிருந்தது.
இதனையடுத்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமள வென பரவி அருகில் இருந்த பழனியம்மாள், பச்சமுத்து ஆகியோரின் 2 வீடுகளிலும் பற்றி கொண்டது.
இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி ராபர்ட் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீரைப் பீச்சி அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 வீடுகளிலும் இருந்த பொருட்கள், 2 வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தீ விபத்து நடந்ததும் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓடி சென்று விட்டதால் உயிரி ழப்பு தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாமரைபாளையம் அருகே உள்ள கோட்டைக்கட்டு வலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
- நிலை தடுமாறி அருண்குமார் மற்றும் மணிகண்டன் ரோட்டில் விழுந்துள்ளனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிவகிரி அம்மன் நகர், ஈ.பி.ஆபிஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது22). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது.
அதேபோல் சிவகிரி திரு.வி.க. பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது19). இவர் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று இரவு அருண்குமார், மணிகண்டன் 2 பேரும் கொடுமுடிக்கு ஒரு வேலையாக சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது தாமரைபாளையம் அருகே உள்ள கோட்டைக்கட்டு வலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி அருண்குமார் மற்றும் மணிகண்டன் ரோட்டில் விழுந்துள்ளனர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இந்த விபத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருண்கு மாரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருண்குமாரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் உடலை பிரேத பரிசோத னைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேர் உடலையும் பார்த்து அவர்களது உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் 2 பேர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்தது.
- அணைக்கு வினாடிக்கு 609 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்தது.
இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.66 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 609 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று வரை கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 1800 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது.
தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும் பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையிலி ருந்து 2,700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
- ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.
- இவர்களிடமிருந்து 79 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கனிராவுத்தர் குளம் காந்திநகர் பகுதியில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த துரைசாமி (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமி–ருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல் கனிராவுத்தர் குளம் பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்ற அண்ணாதுரை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் அம்மா பேட்டை, அரச்சலூர், பங்களாபுதூர், தாலுகா, சென்னிமலை, கவுந்தப்பாடி, கருங்கல்பாளையம், மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மதுவற்ற 10 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர்.
மேலும் இவர்களிடமிருந்து 79 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.
- ஆங்கில புத்தாண்டை யொட்டி நேற்று காலை முதலே கொடிவேரி அணைக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
- நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணைக்கு வந்திருந்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள். மேலும் பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் அதிகளவில் பொது மக்கள் வருவார்கள்.
இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டை யொட்டி நேற்று காலை முதலே கொடிவேரி அணைக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் தங்கள் குடும்ப த்தினருடன் வந்திருந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்த னர்.
காலையில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதி கரித்து காணப்பட்டது. இதனால் கொடிவேரி அணை வளாகம் முழுவதும் மக்களின் கூட்டமாக நிரம்பி வழிந்தது.
தடுப்பணைக்கு வந்த அவர்கள் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகை களையும் ருசித்து சென்றனர். மேலும் பலர் தங்கள் கொண்டு வந்த உணவை அங்கேயே அமர்ந்து சாப்பிட் டனர்.
இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணைக்கு வந்திருந்தனர். இதன் மூலம் சுமார் ரூ.50 ஆயிரம் வரை வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தெருவில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யும் முறை இல்லாததால் தெருநாய்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
- கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகளிலும் சமீபகாலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
தெருவில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யும் முறை இல்லாததால் தெருநாய்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தெருக்களில் செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரம் செல்லும் பெண்களை தெரு நாய்கள் கடிக்க துரத்துகின்றன.
இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி 10 -வது வார்டுக்கு உட்பட்ட வில்லரசம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாகவே தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
200-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக அந்த பகுதியில் சுற்றி வருகின்றன. இந்த தெரு நாய்கள் கால்நடைகளை குறிவைத்து கடித்துக் குதறி வருகின்றன. வீட்டில் வளர்க்கும் ஆடுகள், கன்று குட்டிகளை கடித்து வருகின்றன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வில்லரசம்பட்டி பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி என்பவரின் 4 ஆடுகள், ஒரு கன்று குட்டியை தெரு நாய்கள் கடித்து கொன்றன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வில்லரசம்பட்டி பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (36). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் ஆடுகள், மாடுகள், கோழிகளை வளர்த்து வருகிறார். வீட்டின் பின்னால் கால்நடைகளை கட்டி வைப்பது வழக்கம்.
அதேபோல் நேற்று இரவு வீட்டின் பின் பகுதியில் கால்நடைகளை கட்டியிருந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டுக்குப் பின்னால் இருந்து ஆடு, மாடுகள் அலறும் சத்தம் கேட்டது.
இதை கேட்டு திடுக்கிட்டு எழுந்த சரவணன் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் வளர்த்த ஆடுகள், கோழிகளை தெருநாய்கள் கூட்டமாக கடித்து குதறி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார்.
பின்னர் கதவை திறந்து வெளியே சென்று பார்த்த போது 4 ஆடுகள், 4 கோழிகளை தெரு நாய்கள் கடித்து கொன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த பத்து நாட்களில் இது மூன்றாவது சம்பவம் என்பதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்துள்ளனர்.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
வில்லரசம்பட்டி பகுதி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. 200க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் எங்கள் பகுதியில் சுற்றி வருகின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவது தொடர்கதையாகி வருகிறது.
மேலும் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் செல்லவே அச்சப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வீட்டில் வளர்த்து வரும் கால்நடைகளை குறி வைத்து நாய்கள் தாக்கி கடித்துக் கொன்று வருகின்றன.
இதனால் நாங்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்துள்ளோம். அடுத்ததாக இந்த தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் முன்பு தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி வரவழைக்கப்பட்டது.
- பொள்ளாச்சியில் இருந்து அரிசி ராஜா என்ற மேலும் ஒரு கும்கியை கொண்டு வந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இதுவரை அந்த யானை 2 பேரை மிதித்து கொன்றது.
விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பன் யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில் கருப்பன் யானை வனப்பகுதியில் இருந்து மீண்டும் வெளியேறி கடந்த 1 மாதத்துக்கும் மேலாக ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம், பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகிறது.
இதையடுத்து விவசாயிகள் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி வரவழைக்கப்பட்டது. கருப்பன் யானை இரவில் மட்டும் விவசாயி தோட்டங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்ததால் வனத்துறையினர் கும்கியுடன் இரவு முழுவதும் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனாலும் கருப்பன் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து அரிசி ராஜா என்ற மேலும் ஒரு கும்கியை கொண்டு வந்தனர். ஆனாலும் கருப்பன் யானையை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கலீம் என்ற மேலும் ஒரு கும்கி இன்று அல்லது நாளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் 3 கும்கி யானைகள் மூலம் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் கருப்பன் யானைக்கு காலர் ஐ.டி. பொருத்தி வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும் வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
- சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் போலீசார் ஒப்படை த்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த கணக்கம்பாளையம் சின்னகாளியூர் வேதபாறை பள்ளம் அருகே ரேசன் அரிசி கடத்துவதாக பங்க ளாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் வேனில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பேரிசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் மேட்டு நாசுவம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்க டேஷ் (34) என்பதும், 40 கிலோ எடையுள்ள 22 மூட்டைகள் என சுமார் 1 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பிடிபட்ட ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் அவர் ஓட்டி மினி ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் போலீசார் ஒப்படை த்தனர்.
- மாது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40). இவரது மனைவி மாது (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 6 வருடங்களாக மாதுவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்காக நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல குமார் வேலைக்கு சென்று விட்டார்.
மதியம் அவரது மகன் செல்போன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, தாயார் மாது, வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
உடனடியாக குமார் வீட்டுக்கு சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாதுவை மீட்டு பார்த்துள்ளார். ஆனால், அவர் இறந்துவிட்டார்.
இதுகுறித்து, கணவர் குமார் அளித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிேஷகம் நடந்தது.
- பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.
சென்னிமலை:
2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது.
பின்னர் மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிேஷகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணி முதல் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அப்போது முருகப்பெருமான் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்ததால் மலை கோவிலில் மேல் வாகனங்கள் நிறுத்த இடம்பற்றாக்குறை ஏற்பட்டது.
பின்னர் கார்கள் நிறுத்தப்பட்டு 10 கார்கள் மட்டும் அனுமதிக்கபட்டு மீண்டும் 10 கார்கள் கீழே வந்தால் மேலும் 10 கார்களை அனுப்புவது என பணியாளர்கள் பெரும் சிரமப்பட்டனர்.
கோவில் வளாகத்தில் மிக அதிகமாக பக்தர்கள் கூட்டம் இருந்தது. சிறப்பு தரிசனத்தில் அரை மணி நேரமும், தர்ம தரிசனத்தில் ஒரு மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி, தெய்வானை, தன்னாசியப்பன், பின்னாக்கு சித்தர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.






