ஈரோட்டில் அனுமதியின்றி மதுவிற்ற 10 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர். இவர்களிடமிருந்து 79 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.
ஈரோட்டில் அனுமதியின்றி மதுவிற்ற 10 பேர் கைது
Published on

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கனிராவுத்தர் குளம் காந்திநகர் பகுதியில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த துரைசாமி (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமி–ருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல் கனிராவுத்தர் குளம் பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்ற அண்ணாதுரை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் அம்மா பேட்டை, அரச்சலூர், பங்களாபுதூர், தாலுகா, சென்னிமலை, கவுந்தப்பாடி, கருங்கல்பாளையம், மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மதுவற்ற 10 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர்.

மேலும் இவர்களிடமிருந்து 79 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com