தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

தீ மளமள வென பரவி அருகில் இருந்த பழனியம்மாள், பச்சமுத்து ஆகியோரின் 2 வீடுகளிலும் பற்றி கொண்டது.தீ விபத்தில் வீடுகளிலும் இருந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன.
தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் எரிந்து சேதம்
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம், நாகிரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (80). அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் குலசேகரன் (43), பச்சமுத்து (60).இவர்களுடைய 3 வீடுகளும் தகரம் வேயப்பட்ட கூரை வீடாகும்.

இந்நிலையில் குணசேகரன் வீட்டில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனால் அவரது குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டவாறு வெளியே ஓடி வந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது தீப்பிடித்து வீடு எரிந்து கொண்டிருந்தது.

இதனையடுத்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமள வென பரவி அருகில் இருந்த பழனியம்மாள், பச்சமுத்து ஆகியோரின் 2 வீடுகளிலும் பற்றி கொண்டது.

இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி ராபர்ட் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீரைப் பீச்சி அணைத்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 வீடுகளிலும் இருந்த பொருட்கள், 2 வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தீ விபத்து நடந்ததும் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓடி சென்று விட்டதால் உயிரி ழப்பு தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com