என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடிவேரியில் ஒரே நாளில் 8,500 பேர் குளித்து மகிழ்ந்தனர்
- ஆங்கில புத்தாண்டை யொட்டி நேற்று காலை முதலே கொடிவேரி அணைக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
- நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணைக்கு வந்திருந்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள். மேலும் பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் அதிகளவில் பொது மக்கள் வருவார்கள்.
இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டை யொட்டி நேற்று காலை முதலே கொடிவேரி அணைக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் தங்கள் குடும்ப த்தினருடன் வந்திருந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்த னர்.
காலையில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதி கரித்து காணப்பட்டது. இதனால் கொடிவேரி அணை வளாகம் முழுவதும் மக்களின் கூட்டமாக நிரம்பி வழிந்தது.
தடுப்பணைக்கு வந்த அவர்கள் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகை களையும் ருசித்து சென்றனர். மேலும் பலர் தங்கள் கொண்டு வந்த உணவை அங்கேயே அமர்ந்து சாப்பிட் டனர்.
இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணைக்கு வந்திருந்தனர். இதன் மூலம் சுமார் ரூ.50 ஆயிரம் வரை வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






