search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாளவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு
    X

    தாளவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

    • விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி வரவழைக்கப்பட்டது.
    • பொள்ளாச்சியில் இருந்து அரிசி ராஜா என்ற மேலும் ஒரு கும்கியை கொண்டு வந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இதுவரை அந்த யானை 2 பேரை மிதித்து கொன்றது.

    விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பன் யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.

    இந்த நிலையில் கருப்பன் யானை வனப்பகுதியில் இருந்து மீண்டும் வெளியேறி கடந்த 1 மாதத்துக்கும் மேலாக ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம், பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகிறது.

    இதையடுத்து விவசாயிகள் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி வரவழைக்கப்பட்டது. கருப்பன் யானை இரவில் மட்டும் விவசாயி தோட்டங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்ததால் வனத்துறையினர் கும்கியுடன் இரவு முழுவதும் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனாலும் கருப்பன் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து அரிசி ராஜா என்ற மேலும் ஒரு கும்கியை கொண்டு வந்தனர். ஆனாலும் கருப்பன் யானையை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கலீம் என்ற மேலும் ஒரு கும்கி இன்று அல்லது நாளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பின்னர் 3 கும்கி யானைகள் மூலம் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் கருப்பன் யானைக்கு காலர் ஐ.டி. பொருத்தி வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும் வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

    Next Story
    ×