என் மலர்
ஈரோடு
- வேலை முடிந்ததும் ஒரே மோட்டார் சைக்கிளில் அண்ணன், தம்பி 2 பேரும் வீட்டிற்கு சென்றனர்.
- ஈரோடு-பவானி சாலை சுண்ணாம்பு ஓடை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.
ஈரோடு:
ஈரோடு ஆர்.என்.புதூர் பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(44). இவரது தம்பி தேவராஜ்(41). இருவருக்கும் திருமணம் ஆகி அருகருகே வசித்து வருகின்றனர்.
பன்னீர்செல்வம், தேவராஜ் 2 பேரும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைலில் பேல் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.
2 பேரும் தினமும் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து பணி முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு ஒன்றாக செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடிந்ததும் ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வீட்டிற்கு சென்றனர். பன்னீா்செல்வம் வண்டியை ஓட்டி செல்ல தேவராஜ் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
ஈரோடு-பவானி சாலை சுண்ணாம்பு ஓடை அருகே சென்றபோது முன்னால் சென்ற தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த தங்கவேல் (40) என்பவரது மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.
இதில் நிலை தடுமாறி பன்னீர்செல்வம், தேவராஜ் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பன்னீர்செல்வத்துக்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. தங்கவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம்பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் இறந்த தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
- சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அம்மன் சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், எலவமலை உட்பட சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்தனர்.
- இன்று காலை விவசாயிகளுக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.
- சத்தியமங்கலம் போலீசார் பூ மார்க்கெட்டுக்கு விரைந்து வந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளைவும் பூக்களை விவசாயிகள் அதிகாலை நேரத்தில் அறுவடை செய்து அவற்றை சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஏலம் முறையில் விற்பனை செய்து வருகிறார்கள்.
தினமும் சுமார் 5 டன் அளவுக்கு பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும். இந்த ஏலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் நிர்வாகிகள் தேர்தல் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. எனவே உடனடியாக தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந் ெதடுக்க வேண்டும் என்று சில விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த பிரச்சினை காரணமாக இன்று காலை விவசாயிகளுக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பூ மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுப்பற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார் பூ மார்க்ெகட்டுக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
- சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கறையில் இருந்தபோது பாண்டுரங்கன் திடீரென மயங்கி விழுந்தார்.
- அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (61). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார்.
பாண்டுரங்கன் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியில் ஒரு டீக்கடையில் போண்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 13 வருடமாக பாண்டுரங்கன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4 மாதமாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கறையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாண்டுரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
- தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
- இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஒன்றிய அரசின் நிதி உதவியில் 2005-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இனிவரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளுக்கான இச்சிறப்பு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயின்றவர்கள் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு 10-ம்வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தொடர்கல்வி பயில்வதை இத்திட்ட பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.
தொடர்ச்சியாக தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்றவற்றில் உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இத்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமாக நடப்பாண்டில் உயர்த்தி மாநில அரசின் தொழிலாளர் மற்றும் திறன்வளர்ப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இத்திட்டத்தின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உயர்கல்வி ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
தற்போது பயிலும் கல்லூரி முதல்வரின் அத்தாட்சி சான்று, 10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வங்கிக்கணக்குப்புத்தக நகல், 2 புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை திட்ட இயக்குநர், குழந்தைத் தொழிலாளர் திட்டம் , 6-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு என்னும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் வழியாக விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- திருமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வெ.ரா.இ.திருமகன். 45 வயதாகும் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார்.
கடந்த சில தினங்களாக இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று மதியம் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஈரோட்டில் கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
திருமகன் மரணம் செய்தியை கேட்டதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது வீட்டுக்கு காங்கிரசார் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த சிறப்பு திருமகனுக்கு உண்டு. தந்தை பெரியாரின் கொள்ளு பேரனான இவர் முதல் முதலாக சட்டசபைக்கு சென்றதால் ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காத அளவுக்கு திருமகன் மரணம் அடைந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமார் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவருக்கு அந்த தொகுதியில் அனைத்து தரப்பினரும் வாக்களித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியில் 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். 2014ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தார்.
2016-ம் ஆண்டு முதல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். 2021-ம் ஆண்டு முதல் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.
- அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- அணைக்கு வினாடிக்கு 486 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்தது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.43 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 486 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- வீடு, வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
- பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி இன்று முதல் வீடு, வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 1,183 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கனை விநியோகம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணி வருகிற 8-ம் தேதி வரை நடைபெறும். இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளது.
அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அது குறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வர உள்ளதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
- சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.
ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெ ற்றதாக வியாபாரிகள் கூறினர். புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வர உள்ளதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
கர்நாடகா, ஆந்திரா, போன்ற வெளிமாநி லங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
இதேபோல் தமிழகத்தில் பிற மாவ ட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
இன்று சேலம், செஞ்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். கம்பளி, பெட்சீட் குழந்தைகளுக்கான ஆடைகள், காட்டன் துணிகள் அதிக அளவில் விற்பனையானது.
சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது. இதுபோல் மொத்த விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
- இந்த 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும் 18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி என ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த உழவர் சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக தாங்கள் விளைவிக்கும் காய்களை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதனால் வெளி இடங்களை விட காய்கறிகள் விலை இங்கு மலிவாக கிடைப்பதால் பொதுமக்கள் மத்தியில் உழவர் சந்தைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் இங்கு காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்த 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.50 கோடியே 11 லட்சத்து 67 ஆயிரத்து 565 மதிப்பி லான 18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.
இதன் மூலம் 26 லட்சத்து 45 ஆயிரத்து 408 நுகர்வோர்களான பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர் என உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- சூரம்பட்டி போலீசார் சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
- இதையடுத்து 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு, பாரதிபுரம், மதுரை வீரன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த கார்த்திக் (34), சூரம்பட்டி வலசை சேர்ந்த தங்கராஜ் (50), அதேபகுதியை சேர்ந்த குமார் (38), மூர்த்தி என்ற வெங்கடாச்சலம் (42), வீரப்பன் (52) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.450 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் காரிய காளியம்மன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சத்தியமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
இதில் செண்பகபுதூரை சேர்ந்த முத்துசாமி(73) என்பவரை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து முத்துசாமியை கைது செய்து தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற 7 மோட்டார் சைக்கிள்கள் ரூ.9 ஆயிரம் ரொக்கம், சீட்டுக்கட்டு க்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.55 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து மொத்தம் 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்தது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு நேற்று 609 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு 486 கன அடி வீதம் குறைந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






