பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

சூரம்பட்டி போலீசார் சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி வலசு, பாரதிபுரம், மதுரை வீரன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதன்பேரில் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த கார்த்திக் (34), சூரம்பட்டி வலசை சேர்ந்த தங்கராஜ் (50), அதேபகுதியை சேர்ந்த குமார் (38), மூர்த்தி என்ற வெங்கடாச்சலம் (42), வீரப்பன் (52) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.450 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் காரிய காளியம்மன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சத்தியமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

இதில் செண்பகபுதூரை சேர்ந்த முத்துசாமி(73) என்பவரை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து முத்துசாமியை கைது செய்து தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற 7 மோட்டார் சைக்கிள்கள் ரூ.9 ஆயிரம் ரொக்கம், சீட்டுக்கட்டு க்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com