என் மலர்
ஈரோடு
- குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது.
- அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் வெள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்த வர் பாலசுப்பிரமணியம் (வயது 29). கட்டிட தொழி லாளி. இவரது மனைவி சித்ரா (25).
இவர்களுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் வீட்டிலேயே வைத்து மருத்துவம் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த குழந்தைக்கு நேற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டது. இதையடுத்து உடன டியாக குழந்தையை சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தை யை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
- இடைத்தேர்தலையொட்டி 4 அனைத்து விதமான மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
- அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி எவ்வித அசம்பாவிதங்களும் நடைெபறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இடைத்ேதர்தலையொட்டி அரசு உத்தரவின் படி வரும் 25-ந் தேதி காலை 10 மணி முதல் 27-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து விதமான மதுபானக் கடைகளும்,
வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வருகின்ற மார்ச் மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் செயல்படும் அனைத்துவித மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
மேலும் அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
- வீட்டில் பிரகாசம் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
- இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி தமிழ் நகரை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 42). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கும் இடை யே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சங்கீதா அவரது கணவரை பிரிந்து பு.புளியம்பட்டி காந்திபுரம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து தமிழ் நகரில் பிரகாசம் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சங்கீதா பிரகாசம் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றார். அப்போது கதவு மூடப்பட்டு இருந்தது. ஆனால் நீண்ட நேரம் கதவு திறக்கப்பட வில்லை.
இதையடுத்து சங்கீதா அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தனர். அப்போது வீட்டில் விட்ட த்தில் பிரகாசம் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிரகாசத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது 2-வது கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
- தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 2 கட்டமாக 5 நாட்கள் பிரசாரம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 15-ந்தேதி தனது முதல் கட்ட பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் பரப்புரை செய்த அவர் நேற்று தனது முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது 2-வது கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார். முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதில் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர வெளிமாவட்ட நிர்வாகிகள் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆங்காங்கே பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி தேர்தல் விதிமுறை தீர்வு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான விதிமுறை புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று வரை இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 403 புகார்கள் வந்துள்ளதாகவும், இதில் 390 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த புகாரில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஆட்கள் சென்று விடுவதால் தறிப்பட்டறைக்கு யாரும் வேலைக்கு வருவதில்லை என்றும் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு புகார் வந்துள்ளது.
இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகவும் பணம், பரிசுப்பொருட்கள் ஏதாவது விநியோகிக்கப்படுவது தொடர்பாகவும் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்துள்ளனர்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களில் 90 சதவீத புகார்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு தொடர்பு இல்லாத புகார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கிழக்கு தொகுதியில் 32 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவுகள் கண்காணிக்கப்படும்.
- துணை ராணுவம் பாதுகாப்பு போடப்படும். இது தவிர மற்ற வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு முழுவதும் வீடியோ எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்காக கடந்த மாதம் 31-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. 8-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 10-ந்தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க.சார்பில் கே.எஸ். தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட உடனே வேட்பாளர்கள் பெயர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் மற்றும் வாக்குச்சாவடி முன்பு ஒட்டும் வேட்பாளர்கள் போட்டோ முகவரி மற்றும் சின்னம் அடங்கிய போஸ்டர்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தேர்தலில் 77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 78 பெயர், சின்னங்கள் இடம் பெற வேண்டும் என்பதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேர்தலுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்பட்டது.
இதையடுத்து கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் வி.வி.பேட் எந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த பணி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.
பின்னர் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான 26-ந்தேதி காலை 11 மணி முதல் அனைத்து ஓட்டு சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். பின்னர் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் கட்டுப்பாட்டு கருவி மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் வி.வி.பேட் எந்திரத்தையும் பொருத்தி ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் வைத்து இருப்பார்கள்.
பின்னர் ஓட்டுப்பதிவு நாளான 27-ந் தேதி காலை 6 மணிக்கு அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். பின்னர் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
கிழக்கு தொகுதியில் 32 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவுகள் கண்காணிக்கப்படும். மேலும் அங்கு துணை ராணுவம் பாதுகாப்பும் போடப்படும். இது தவிர மற்ற வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு முழுவதும் வீடியோ எடுக்கப்படும். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய அரசு ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பார்கள்.
இதுதவிர மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்களும் வாக்குப்பதிவை கண்காணிப்பார்கள்.
- மின்கட்டணம் 54 சதவீதம் உயர்த்தி விட்டனர்.
- வீட்டு வரி, கடைவரி என அனைத்தும் உயர்ந்து விட்டது.
ஈரோடு :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு வாக்கு கேட்டு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-வது நாளாக நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்தார். கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் முதல் சூரம்பட்டி நால்ரோடு வரை பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஆதரவு திரட்டினார்.
அவர் ராஜகோபால் தோட்டம் பகுதியில் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் செய்யவில்லை என்று பச்சை பொய் கூறுகிறார்.
21 மாத ஆட்சியில் தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பணி கூட செய்யவில்லை.
அமைச்சர்கள் வீதி வீதியாக வந்து வாக்காளர்களுக்கு ரூ.1000, ரூ.2000 என்று கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் முதல்-அமைச்சராக இருந்தபோது 110 விதியின் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்கினேன். ஆனால் 21 மாத தி.மு.க. ஆட்சியில் 7 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.
10 ஆண்டுகளில் 53 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்தோம். அதை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. அம்மா 2 சக்கர வாகனம் வழங்கும்திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என்று அ.தி.மு.க. திட்டங்களை நிறுத்தி விட்டனர்.
மின்கட்டணம் 54 சதவீதம் உயர்த்தி விட்டனர். இன்னும் 4 ஆண்டுகளில் 24 சதவீதம் உயரும். வீட்டு வரி, கடைவரி என அனைத்தும் உயர்ந்து விட்டது. இப்படி படித்தவர்கள், பாமரர்கள் என்று அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க., எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
- அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவ தால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 725 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலுக்கு நேற்று 1,500 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1,800 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இதுபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
- பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி, நல்லூர் பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது பு.புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளி சாணார்பதி அருகே ஒரு பகுதியில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (60) என்பதும், அவர் அந்த பகுதியில் முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மறைத்து வைத்து இருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
- இது குறித்து கடத்தூர் போலீசில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குழி பகுதியை சேர்ந்தவர் யாசிக் (வயது 36). இவர் கோவை பிரிவு ரோட்டில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து கொண்டு கடையை வீட்டி விட்டு சென்று விட்டார்.
மறுநாள் காலை பேக்கரி கடையை திறக்க வந்தார். அபபோது கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து அவர் கடை உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்து இருந்து ரூ.45 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து யாசிக் கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- தி.மு.க. தேர்தல் பணிமனை முன்பாக அ.தி.மு.க. சின்னத்தை வரைந்ததற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- போலீசார் அ.தி.மு.க.வினரிடம் இப்பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி வாங்கி வாருங்கள் என அறிவுறுத்தினர்.
ஈரோடு:
ஈரோடு, கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அதே சமயம் கருங்கல்பாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகே கமலா நகர் செல்லும் வீதியில் தி.மு.க. தேர்தல் பணிமனை உள்ளது.
அந்த பணிமனையின் முன்பாக அ.தி.மு.க.வினர் அவர்களது சின்னத்தை கோலமாக வரைந்து வைத்து பிரசாரத்துக்காக காத்திருந்தனர். தி.மு.க. தேர்தல் பணிமனை முன்பாக அவர்கள் அ.தி.மு.க. சின்னத்தை வரைந்ததற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அ.தி.மு.க.வினரிடம் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து இந்த வழியாக நீங்கள் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். ஆனால் அ.தி.மு.க.வினர் அதை கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் அ.தி.மு.க.வினரிடம் இப்பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி வாங்கி வாருங்கள் என அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அங்கேயே நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அப்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
- லஞ்சம் கொடுக்க மனமில்லாத மூர்த்தி இது குறித்து ஈரோடு லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
- லஞ்சம் ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி அவர்கள் கொடுத்து அனுப்பிய ரசாயணம் தடவிய பணத்துடன் மூர்த்தி இன்று உக்கரத்தில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றார்.
கோபி:
சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் காளிகுளம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (50). விவசாயி. இவர் அந்த பகுதியில் கோழி பண்ணை அமைத்துள்ளார். கோழி பண்ணைக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டி உக்கரம் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் அதே அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றி வரும் புங்கம்பள்ளி பகுதியை சேர்ந்த சுந்தரம் (45) என்பவர் மூர்த்தியை தொடர்பு கொண்டு புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத மூர்த்தி இது குறித்து ஈரோடு லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து லஞ்சம் ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி அவர்கள் கொடுத்து அனுப்பிய ரசாயணம் தடவிய பணத்துடன் மூர்த்தி இன்று உக்கரத்தில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றார்.
பின்னர் மூர்த்தி அந்த பணத்தை சுந்தரத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைவாக இருந்த லஞ்சம் ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் சுந்தரத்தை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான காணப்பட்டது.






