என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 403 புகார்கள் குவிந்தது
  X

  மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 403 புகார்கள் குவிந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

   ஈரோடு:

   ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

   இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர வெளிமாவட்ட நிர்வாகிகள் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆங்காங்கே பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

   இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி தேர்தல் விதிமுறை தீர்வு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான விதிமுறை புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று வரை இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 403 புகார்கள் வந்துள்ளதாகவும், இதில் 390 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

   இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த புகாரில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஆட்கள் சென்று விடுவதால் தறிப்பட்டறைக்கு யாரும் வேலைக்கு வருவதில்லை என்றும் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு புகார் வந்துள்ளது.

   இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகவும் பணம், பரிசுப்பொருட்கள் ஏதாவது விநியோகிக்கப்படுவது தொடர்பாகவும் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்துள்ளனர்.

   தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களில் 90 சதவீத புகார்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு தொடர்பு இல்லாத புகார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

   Next Story
   ×