என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
- தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டு உள்ள மின்கட்டணத்தை குறைக்க கோரி அனைத்து வகை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மேலும் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும் நடந்தது.
இந்நிலையில் மின் கட்டணத்தை குறைக்கக் கோரி தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.
இதன்பேரில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். மேலும், தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பரபரப்பு நேர (பீக் அவர்ஸ்) கட்டணம் திரும்பப்பெற வேண்டும்.
சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும். "மல்டி இயர் டேரிப்" -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நிர்வாகிகள் கருப்பு அட்டை அணிந்து ஊர்வலமாக சென்று மனு வழங்கினர்.
- லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
- போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்,
ஈரோடு சத்திரம் புதூர், டி.ஜி.பதூர் நால்ரோடு பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் செல்வம் (வயது 35), காளியப்பன் மகன் குமார் (50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ. 3 ஆயிரத்து 200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர் நீர் தேக்க பகுதியில் கல்லூரி மாணவர் மூழ்கி பலியானார்
- இதுகுறித்து பவா னிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புளியம்பட்டி,
கோவை மாவட்டம் கணபதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ஜோசப் (வயது 19). இவர் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில் ஜோசப் இவருடைய நண்பர் சரவ ணன் உள்ளிட்ட 6 பேர் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து பவா னிசாகர் சித்தன் குட்டை கருப்பராயன் கோவில் அருகில் உள்ள நீர் தேக்க பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது ஜோசப், சரவ ணன் ஆகியோர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சசைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோ தித்த மருத்துவர்கள் ஜோசப் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். சரவ ணன் அங்கு முதலுதவி சிகி ச்சை பெற்று கோவை தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இதுகுறித்து பவா னிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- போதைப் பொருள்கள் விற்ற 7 பேர் கைது செய்யபட்டனர்
- போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், அந்தியூர், வெள்ளித்திருப்பூர், கோபி, ஈரோடு வடக்கு, அம்மாபேட்டை, பவானி, போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு மரப்பாலம், அந்தியூர், பவானி ரோடு, மூலையூர், கோபி, நாராயண வலசு, பூதபாடி, நல்லிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருள்களை விற்ப னை செய்து கொண்டிருந்த மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஷாஜகான் (வயது 55), பவானி ஜோதி விநாயகர் தெரு மாதேஸ்வரன் மனைவி அமுதா (39), வெள்ளி திருப்பூர் மூலையூர் முத்து மகன் மூர்த்தி (40), கோபி வி.ஐ.பி. டீச்சர் நகர் ராமசாமி மகன் மணிக ண்டன் (45), நாராயண வலசு இந்திரா நகர் முகு ந்தன் மகன் வெங்கடேசன் (55), அந்தியூர் அண்ணா நகர் சாமியப்பன் மகன் பன்னீர்செல்வம் (46), பவானி சின்ன மூலப்பா ளையம் செல்லவேல் மகன் ரமேஷ் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த கூலிப், ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழ க்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்ட அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
- ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் சுமார் 1 மணி நேர த்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமை யாக உள்ளது. வெயிலால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். வயதான வர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். ஆனால் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போல் சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து காண ப்பட்டது. வெயிலால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் சத்திய மங்கலம் பகுதியில் நேற்று மாலை திடீரென மேக மூட்டமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் பலத்த மழை கொட்டியது. இதை தொட ர்ந்து சிக்கரசம் பாளையம், புளியங்கோம்பை பண்ணாரி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் சுமார் 1 மணி நேர த்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. மேலும் திம்பம், ஆசனூர் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளிலும் நேற்று இரவு 7 மணி முதல் 2 மணி நேரம் மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திடீர் மழையால் வனப்பகுதி முழுவதும் குளி ர்ச்சியாக காணப்பட்டது. இதே போல் டி.என்.பாளையம், கொங்கர் பாளையம், வினோபா நகர் மற்றும் குண்டேரி பள்ளம் அணை பகுதி மற்றும் வனப்பகுதியிலும் பலத்த மழை கொட்டியது. மாவட்ட த்தில் அதிக பட்சமாக குண்டேரிபள்ளம் அணைப் பகுதியில் 34.60 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. மேலும் கோபிசெட்டி பாளையம், கொடிவேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் பரவ லாக மழை பெய்தது.
இதே போல் அம்மாபேட்டை, நெரிஞ்சிபேட்டை, பூத ப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரம் பரவ லாக மழை பெய்தது. இதனால் வெளிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- குண்டேரி பள்ளம் 34.60, கொடிவேரி 12, கோபி 7.20, சத்திய மங்கலம் 5, அம்மாபேட்டை 3.60, வரட்டுபள்ளம் 2.20.
- எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.97 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
- கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.24.30 காசுக்கு விற்பனையானது
மொடக்குறிச்சி,
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 8 ஆயிரத்து 489 எண்ணிக்கையிலான 3 ஆயிரத்து 869 கிலோ எடை யுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.24.30 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ25.65 காசுகள், சராசரி விலையாக 25.25 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.97 ஆயிரத்து 744-க்கு விற்பனையாகின.
- வெங்காய வியாபாரி போல் நடித்து சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யபட்டனர்
- சரக்கு ஆட்டோ, வெங்காயம் ட்ரம்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதி, தமிழகம்-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது. மலை கிராமங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு விநியோ கிக்கப்படும் அரிசியை சிலர் சட்ட விரோதமாக கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே மெட்டல் வாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சரக்கு ஆட்டோ வில் இருவர் வெங்காயம் விற்பனை செய்து கொ ண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவ ர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் அவர்கள் இரு வரும் மெட்டல் வாடியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து பிளாஸ்டிக் ட்ரம்க ளில் நிரப்பி கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றதும், இருவரும் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த பசில்பாட்சா (வயது 43), ஆசிபுல்லா (39) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவ ரையும் பிடித்த போலீசார் சரக்கு வாகனத்துடன் ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். தொடர்ந்து 2 பேரையும் உணவு பொ ருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோ, வெங்காயம் ட்ரம்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.
- புரட்டாசி மாதத்தை யொட்டி ஈரோட்டில் துளசி விற்பனை அதிகரித்துள்ளது
- ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனையாகிறது
ஈரோடு,
புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என கருதப்படுகிறது. இதனால் புராட்டாசு மாதம் பிறந்தது முதலே பெருமாள் கோவில் களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் சனிக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகள வில் வந்து செல்கிறார்கள். மேலும் பெருமாளுக்கு உகந்ததாக துளசி உள்ளது. இதனால் பெருமாள் கோவி லுக்கு செல்லும் பக்தர்கள் துளசி கொண்டு சென்று பெருமாளுக்கு படைத்து வழிபாடுகிறார்கள். அதே போல் பெருமாள் கோவில் களில் சாமிக்கு துளிசி மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி புரட்டாசி மாதம் பிறந்தது. அன்று முதல் பக்தர்கள் பலர் மாவட்ட த்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளில் வருகிறார்கள். மேலும் புரட்டாசி சனிக்கிழ மைகளில் கடந்த 3 வாரமாக அனைத்து பெருமாள் கோவி ல்களிலும் பக்தர்கள் ஏராள மானேர் வந்து சாமி தரிசனம் செய்து வரு கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் துளசியை மாலையாக உதிரியாகவும் அதிகளவில் கொண்டு வந்து பெருமாளுக்கு அணி வித்து தரிசனம் செய்கி றார்கள். தொடர்ந்து பக்தர்கள் துளசி வாங்கு வதால் கடந்த 3 வாரங்களாக துளசி விற்ப னை அதிகரித்து வருகிறது.
இதனால் பெருமாள் கோவில்கள் முன்பு துளசி விற்பனைகள் கடைகளும் அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற பூக்களை விட துளசி அதி களில் விற்பனை செய்ய ப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் துளசி கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்க ளாக கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஈரோட்டில் பல பகுதிகளில் கடந்த மாதம் துளசி 1 கட்டு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த து.
ஆனால் கடந்த 3 வாரங்க ளாக விலை அதிகரித்து வருகிறது. இதனால் தற்போ து ஈரோட்டில் ஒரு கட்டு துளசி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதி களை சேர்ந்த ஏராளமான சிறு மற்றும் பெரிய வியா பாரிகள் அதிகளவில் துளசி வாங்கி செல்கிறார்கள். இதனால் துளசி விரைவில் விற்று தீர்ந்து விடுகிறது. மேலும் பெரும்பாலான கடைகளில் சனிக்கிழமை களில் துளசி கிடைப்ப தில்லை. பற்றக்குறை நிலவி வருகிறது.
அதே போல் பல பகுதி களில் இருந்து ஈரோட்டுக்கு கடந்த மாதம் 200 கட்டு களுக்கு மேல் துளசி வரும். ஆனால் தற்போது வியா பாரிகள் போட்டி போட்டு துளசி வாங்கி செல்வதால் வரத்தும் குறைந்தது. இதனால் தற்போது 50 முதல் 60 துளசி கட்டுகள் மட்டுமே கடைகளுக்கு வருகிறது. அதுவும் விரை வில் விற்று தீர்ந்து விடுகிறது. அதே போல் அந்தியூர் பகுதியில் கடந்த மாதம் ஒரு கட்டு துளசி ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.30 வரை விற்கப்பட்டு வரு கிறது.
அதே போல் அந்தியூர் பகுதியில் 1 முழம் துளசி முன்பு ரூ.10-க்கு விற்க ப்பட்டது. ஆனால் தற் போது ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப் படுகிறது.கடந்த மாதம் வரை ரூ.50-க்கு ஒரு பை நிறைய வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது தேவை அதிரிப்பு மற்றும் விலை ஏற்றாத்தால் குறைந்த அளவில் வாங்கி செல்லும் நிலை உள்ளதாக சிறு வியாபாரிகள் தெரி வித்தனர். ஆனால் துளசி விலை ஏற்றம் ஏற்பட்டாலும் பக்தர்கள் பலர் தங்கள் தேவைக்கேற்ப அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். மேலும் வரும் நாட்களிலும் துளசி தேவை அதிகரித்து உள்ளதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர். தொடர்ந்து துளசி விற்ப னை அதிகரித்து உள்ளது. இதனால் வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- சட்டவிரோதமாக மதுவிற்ற 6 பேர் கைது செய்யபட்டார்
- விற்ப னைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த னர்.
நம்பியூர்,
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கடத்தூர், பெருந்துறை, ஈரோடு தெற்கு, புளிய ம்பட்டி, கவுந்தப்பாடி. நம்பியூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது அழுகுளி, பெருந்துறை, சூரம்பட்டி வலசு, புளியம்பட்டி, கவுந்த ப்பாடி, நம்பியூர் சுற்றுவ ட்டார பகுதிகளில் அனுமதி யின்றி சட்ட விரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் மருதவாயலை சேர்ந்த காசி மகன் கோபால் (வயது 46), அதே மாவட்ட த்தைச் சேர்ந்த பெரியகோ ட்டை அழகர் மகன் பாண்டி கண்ணன் (29), சூரம்ப ட்டிவலசு சாஸ்திரி சாலையை சேர்ந்த சங்கரன் மனைவி ருக்குமணி (46), கும்பபாளையம் பகுதி யைச் சேர்ந்த மூர்த்தி (49), பவானி மேற்கு பாரதிநகரை சேர்ந்த செங்கோட்டையன் மகன் அன்பு என்ற அன்ப ரசன் (31), குருமந்தூர் மேடு தமிழ் நகரை சேர்ந்த சீதாராம் (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்த முதியவர் கைது செய்யபட்டார்
- அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார்.
பவானி,
பவானி மற்றும் சித்தோடு பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பவானி, சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பவானி, சொக்காரம்மன் நகர் பகுதியில் போலீசார் தீடீர் சோதனை மேற் கொண்டனர். அப்போது அதே பகுதி யை சேர்ந்த வில்சன் (63) என்பவர் மாருதி வேனில் கடைகளுக்கு சென்று சில்லறை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
அப்போது கடந்த சில மாதங்களாக வில்சன் தனது விற்பனை வேனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. இந்நிலையில் சம்பவத்த ன்று சித்தோடு அருகே உள்ள பட்டரை மேடு பகுதி யில் ஒரு வீட்டின் அருகே வில்சன் வேனை நிறுத்தி இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் போலீசார் அவர் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 140 கிலோ மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்த னர். அதே போல் அவர் பவானியில் உள்ள ஒரு வீட்டில் அவர் வசித்து வரு கிறார். இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து வில்சன் தங்கி இருந்த சொக்காரம்மன் நகர் பகுதியில் உள்ள வீட்டின் அருகே தனது உறவினர் வீட்டில் சுமார் 60 கிலோ மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் பதுக்கி இருந்தது சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து பவானி மற்றும் சித்தோடு பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 200 கிலோ குட்கா, பான் மசாலா மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனும் பறி முதல் செய்யப்பட்டது. இது குறித்து பவானி மற்றும் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து வில்சனை சித்தோட்டில் கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார்.
- பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது
- அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விட ப்படுகிறது
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 69.24 அடியாக சரிந்து உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 536 கனஅடியாக நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விட ப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 600 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்படுகிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3000 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.59 அடியாகவும், பெரு ம்பள்ளம் அணையின் நீர்மட்டம் 9.94 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.98 அடி யாகவும் உள்ளது.
- சாஜிவுதீன் பாத்திமா மற்றும் முபாரக் கீழ்பவானி வாய்க்காலில் கை, கால் கழுவதற்காக இறங்கி உள்ளனர்.
- அலறல் சத்தம் கேட்டு அவர்களது உறவினர்கள் மற்றும் வாய்க்காலில் இருந்த சிலர் ஓடி வந்தனர்.
சத்தியமங்கலம்:
கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சாஜிவுதீன் பாத்திமா. இவரது மகன் முபாரக் (வயது 18). சாஜிவுதீன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
முபாரக் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் மதியம் சாஜிவுதீன் பாத்திமா தனது மகன் முபாரக் மற்றும் உறவினர்களுடன் காரில் கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வந்தனர்.
சத்தியமங்கலத்தில் சுற்றிப் பார்த்துவிட்டு சத்தியமங்கலம் அடுத்த செண்பகப்புதூரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு வந்தனர். அப்போது சாஜிவுதீன் பாத்திமா மற்றும் முபாரக் கீழ்பவானி வாய்க்காலில் கை, கால் கழுவதற்காக இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சாஜிவுதீன் பாத்திமா மற்றும் முபாரக் நீரில் மூழ்கினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அவர்களது உறவினர்கள் மற்றும் வாய்க்காலில் இருந்த சிலர் ஓடி வந்தனர். இதையடுத்து அவர்கள் சாஜிவுதீன் பாத்திமாவை காப்பாற்றி விட்டனர். ஆனால் அவரது மகன் முபாரக் அதற்குள் நீரில் மூழ்கி விட்டார்.
பின்னர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய முபாரக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரை தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அவரைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் முபாரக்கை தேடினர்.
அப்போது வாய்க்காலின் சிறிது தூரத்தில் முபாரக் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






