என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி நடந்து சென்று கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது மோதியது.
    • இதில் தமிழ்ச்செல்வி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்ச கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (45). இவர் கடந்த 2 நாட்களாக பெரிய குறவ ம்பாளையம் நடராஜபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து நடவு பணிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வியும், நடராஜபுரத்தை சேர்ந்த பாப்பாள் (55), லட்சுமி (52), ரங்கம்மாள் (50), ஜோதி (55) ஆகியோர் ஊஞ்சக்கொரை என்ற இடத்தில் நடவு பணிக்கு சென்று விட்டு நடந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    காவிரிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக கடுக்காம்பாளையத்தை சேர்ந்த தமிழரசு என்பவர் அதிவேகமாக ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி நடந்து சென்று கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது மோதியது.

    இதில் 5 பெண்களும், தமிழரசும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து படுக்காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தமிழ்ச்செல்வி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களில் தமிழரசு மற்றும் ஜோதி ஆகியோர் மேல் சிகிச்சை க்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மற்றவர்கள் தொடர்ந்து கோபி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிறு வலூர் போலீசார் வழ க்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பேக்கரி கடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • 2 கடைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    நம்பியூர்:

    நம்பியூர் வட்டாரத்திற்கு உட்பட்ட குருமந்தூர், நடுப்பாளையம், குருமந்தூர் மேடு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் நம்பியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலு வலர் குழந்தைவேல் தலை மையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்பொழுது குருமந்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அசைவ உணவு தயாரிக்க செயற்கை நிறமி பொடிகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதை அடுத்து அதிகாரிகள் அந்த செய ற்கை நிற பொடிகளை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்ப ட்டது. இதேபோல் குருமந்தூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் அதிகாரி கள் சோதனை செய்தனர்.

    அப்போது தேதி குறிப்பிடாமல் உணவு பொருட்கள் விற்பனைக்காக வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதை அடுத்து தேதி குறி ப்பிடாமல் வைக்கப்பட்டி ருந்த உணவு பொருட்ளை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.

    மேலும் உணவகங்களில் செயற்கை நிற பொடிகள் மற்றும் உணவு கெட்டுப் போகாமல் இருக்க அஜின மோட்ட போன்றவைகள் பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகள்அறிவுறுத்தி எச்சரித்தனர்.

    மேலும் அந்த 2 கடைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, உணவு பாது காப்பு விதிமுறை களை மீறு வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அனைத்து கடைகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு ள்ளதாக தெரிவித்தனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 69.09 அடியாக சரிந்து உள்ளது.
    • அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 69.09 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,711 கனஅடியாக நீர்வரத்து வருகிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வா ய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 650 கனஅடியாக அதிகரித்து திறந்து விடப்படுகிறது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.59 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 9.84 அடியாகவும், வரட்டு ப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.95 அடியா கவும் உள்ளது.

    • சத்தியமங்கலம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 140 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் நகர் பகுதியில் பவானி ஆற்றுக்கு தெற்கு பகுதியில் அமை ந்துள்ள சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட திருநகர் காலனி, எஸ்.ஆர்.டி.கார்னர் ரங்கசமுத்திரம், புதிய பஸ் நிலையம் மற்றும் கோபி சாலையில் அரியப்ப ம்பாளையம் வரையிலும் கோணமூலை ஊராட்சியில் காந்திநகர், கூத்தனூர் மற்றும் கோவை சாலையில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் வரையிலும் 140 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு தற்போது பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது.

    இந்த கேமிராக்களின் ஒட்டுமொத்த இணைப்புகளும் சத்திய மங்கலம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதில் 2 போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    தற்போது பஸ் நிலைய வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சி.சி.டி.வி. கேமிராக்கள் பதிவை கண்காணிப்பதற்காக எல்.இ.டி. தொலைக்கா ட்சிகள் பொருத்தப்பட்டுள்ளது.

    விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு சத்தியமங்கலம் நகரின் தெற்கு பகுதி முழுவதும் சி.சி.டி.வி.யின் கட்டுப்பா ட்டுக்குள் கொண்டு வரப்படும்.

    இதன் மூலம் குற்றங்கள் வெகுவாக குறை யும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மகாராஷ்டிரா மாநிலம் நான் தெட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் ஈரோட்டை அடைகிறது.
    • ஈரோடு பயணிகள் ரெயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    ஈரோடு:

    சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மகாராஷ்டிரா மாநிலம் நான் தெட்டில் இருந்து வரும் 13-ந் தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் 14-ந் தேதி மதியம் 12 மணிக்கு ஈரோட்டை அடைகிறது.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் வரும் நவம்பர் மாதம் 26-ந் தேதி வரை இந்த சிறப்பு ெரயில் இயக்கப்படும்.

    இதேப்போல் ஈரோட்டில் வரும் 15-ந் தேதி காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ெரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு நான் தொட்டை சென்றடையும்.

    ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் நவம்பர் 26-ந் தேதி வரை இந்த சிறப்பு ரெயில் இயக்க ப்படும்.

    ஜோலார்பேட்டை ெரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று தொடங்கி நாளை மறுநாள், 13 வரும் 21-ந் தேதி மற்றும் 23-ந் தேதி ஆகிய நாட்களில் ஈரோடு பயணிகள் ெரயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    மறு மார்க்கத்தில் இன்றும், நாளை மறுநாளும், 13, 21, 28 ஆகிய தேதிகளில் ஜோலா ர்பேட்டை-திருப்பத்தூர் இடையே ரத்து செய்யப்பட்டு திருப்பத்தூரில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழ்பவானி ஆற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வாய்க்காலில் இறந்து கிடந்தது காணாமல் போன பெருமாள் என்பது தெரிய வந்தது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பி யூர் அருகே உள்ள வெள்ளாள பாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). சலவை தொழிலாளி.

    இவர் கடந்த 6 நாட்க ளுக்கு முன்பு மாயமானதாக அவரது மகன் ராம ச்சந்திரன் என்பவர் வர ப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கோபி அருகே உள்ள செம்மாண்டபாளையம் சின்னப்பாலம் என்ற இடத்தில் கீழ்பவானி ஆற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வாய்க்காலில் இறந்து கிடந்தது காணாமல் போன பெருமாள் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வர ப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கவியரசன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்தது.
    • பரிசோதித்த டாக்டர்கள் கவியரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த காரப்பாடி கிராம த்தை சேர்ந்தவர் கவியரசு (வயது 45). இவர் எலக்ட்ரீசி யனாக வேலை செய்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவும் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ள னர்.

    இந்த நிலையில் கவியரசு கொமார கவுண்டன் பாளை யம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பழுது அடைந்த மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது கவியரசன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்தது. இதில் அவர் கீழே விழுந்தார். இதை கண்ட உடன் இருந்த பிரகாஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவியரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கவியரசு உடல் பிரேதபரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வானில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
    • தாளவாடி பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. காலை யிலிருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    அதே போல் மாவட்ட முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகமாக பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் மாலை 5 மணி பிறகு வானில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி யுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகரப் பகுதியில் சுமார் 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் இரவு சாரல் மழை செய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    தாளவாடி பகுதியில் இரவில் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் கொடுமுடி, பெருந்துறை, சத்தியமங்க லம், கோபி, பவானி, கவுந்த ப்பாடி, வரட்டுப்பள்ளம், கொடிவேரி, சென்னிமலை, நம்பியூர், பகுதிகளிலும் இடி யுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழை யால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    தாளவாடி - 33, கொடு முடி - 30.80, பெருந்துறை - 27, சத்தியமங்கலம்-27, கோபி - 25.20, பவானி - 21, பவானிசாகர் - 16, கவுந்தப்பாடி - 9.20, ஈரோடு- 9, வரட்டு பள்ளம்- 8.80, கொடிவேரி-6.20, சென்னிமலை - 5, நம்பியூர் - 3.

    • போலீசார் விசாரணை நடத்தியதில் மணிகண்டன் என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    • பின்னர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக் காட்டு வலசு மடிக்காரர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (41). இவர் வீரப்பம் பாளையம் பகுதியில் கிருத்திகாட்ரை கிளினர்ஸ் என்ற துணி சலவை மற்றும் அயர்னிங் செய்யும் கடையை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4 ம் தேதி கடையில் பணிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து அடுத்த நாள் காலை சரவணன் கடையை வந்து பார்த்த போது கடையின் முன் பக்க சட்டர் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் மின் கட்டணம் செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து சரவணன் வீரப்பன் சத்திரம் போலீசில் தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சி களை ஆய்வு செய்தனர்.

    அதில் போலீசாருக்கு முக்கிய தடையம் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் சூரம்பட்டி வலசு கோவலன் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் தான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனைஅடுத்து வீரப்பன்சத்திரம் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    மணிகண்டன் மீது ஏற்க னவே அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு நிலுவைவில் உள்ளது. பின்னர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சம்பவத்தன்று கவின் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார்.
    • குளிக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோடு இந்திரா வீதியை சேர்ந்த முருகன் மகன் கவின் (வயது 22). இவர் கோவையில் பார்சல் சர்வீசில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கவின் தனது நண்பர்களுடன் பெருந்துறை-ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார். இவருக்கு நீச்சல் தெரியாது. அதனால் குளிக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தேடி பார்த்தும் கவின் கிடைக்கவில்லை.

    மறுநாள் மீண்டும் தேடி பார்த்த போது கவின் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி அவரின் உடல் கரையில் ஒதுங்கி கிடந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந்தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இன்று மீண்டும் ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வந்தது. சீமான் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை. சீமானுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதால் அவரால் இன்று ஆஜராக முடியவில்லை என அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தருவதாக சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை வரும் 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

    • பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கொடிவேரி அணை வழியாக 1,302 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றானது கொடிவேரி அணை. இந்த அணைக்கு ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணை வழியாக 1,302 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் 1302 கன அடி தண்ணீர் வெளியேறி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைகட்டுக்கு வரவோ, குளிக்கவோ பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

    மேலும் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் கால்நடைகள் மேய்க்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் பொதுபணித்துறை சார்பில் அறிவுறத்தப்பட்டுள்ளது.

    ×