காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு 650 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 69.09 அடியாக சரிந்து உள்ளது.அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு 650 கனஅடியாக அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 69.09 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,711 கனஅடியாக நீர்வரத்து வருகிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வா ய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 650 கனஅடியாக அதிகரித்து திறந்து விடப்படுகிறது.

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.59 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 9.84 அடியாகவும், வரட்டு ப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.95 அடியா கவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com