என் மலர்
நீங்கள் தேடியது "விபத்தில் பெண் தொழிலாளி பலி"
- மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி நடந்து சென்று கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது மோதியது.
- இதில் தமிழ்ச்செல்வி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்ச கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (45). இவர் கடந்த 2 நாட்களாக பெரிய குறவ ம்பாளையம் நடராஜபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து நடவு பணிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வியும், நடராஜபுரத்தை சேர்ந்த பாப்பாள் (55), லட்சுமி (52), ரங்கம்மாள் (50), ஜோதி (55) ஆகியோர் ஊஞ்சக்கொரை என்ற இடத்தில் நடவு பணிக்கு சென்று விட்டு நடந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
காவிரிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக கடுக்காம்பாளையத்தை சேர்ந்த தமிழரசு என்பவர் அதிவேகமாக ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி நடந்து சென்று கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது மோதியது.
இதில் 5 பெண்களும், தமிழரசும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து படுக்காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தமிழ்ச்செல்வி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களில் தமிழரசு மற்றும் ஜோதி ஆகியோர் மேல் சிகிச்சை க்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றவர்கள் தொடர்ந்து கோபி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிறு வலூர் போலீசார் வழ க்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






