என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்க்காலில் மூழ்கி"

    • சம்பவத்தன்று கவின் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார்.
    • குளிக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோடு இந்திரா வீதியை சேர்ந்த முருகன் மகன் கவின் (வயது 22). இவர் கோவையில் பார்சல் சர்வீசில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கவின் தனது நண்பர்களுடன் பெருந்துறை-ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார். இவருக்கு நீச்சல் தெரியாது. அதனால் குளிக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தேடி பார்த்தும் கவின் கிடைக்கவில்லை.

    மறுநாள் மீண்டும் தேடி பார்த்த போது கவின் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி அவரின் உடல் கரையில் ஒதுங்கி கிடந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×