என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்ற சம்பவங்களை தடுக்க 140 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
    X

    குற்ற சம்பவங்களை தடுக்க 140 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

    • சத்தியமங்கலம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 140 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் நகர் பகுதியில் பவானி ஆற்றுக்கு தெற்கு பகுதியில் அமை ந்துள்ள சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட திருநகர் காலனி, எஸ்.ஆர்.டி.கார்னர் ரங்கசமுத்திரம், புதிய பஸ் நிலையம் மற்றும் கோபி சாலையில் அரியப்ப ம்பாளையம் வரையிலும் கோணமூலை ஊராட்சியில் காந்திநகர், கூத்தனூர் மற்றும் கோவை சாலையில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் வரையிலும் 140 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு தற்போது பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது.

    இந்த கேமிராக்களின் ஒட்டுமொத்த இணைப்புகளும் சத்திய மங்கலம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதில் 2 போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    தற்போது பஸ் நிலைய வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சி.சி.டி.வி. கேமிராக்கள் பதிவை கண்காணிப்பதற்காக எல்.இ.டி. தொலைக்கா ட்சிகள் பொருத்தப்பட்டுள்ளது.

    விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு சத்தியமங்கலம் நகரின் தெற்கு பகுதி முழுவதும் சி.சி.டி.வி.யின் கட்டுப்பா ட்டுக்குள் கொண்டு வரப்படும்.

    இதன் மூலம் குற்றங்கள் வெகுவாக குறை யும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×