மாயமான முதியவர் வாய்க்காலில் பிணமாக மீட்பு

கீழ்பவானி ஆற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வாய்க்காலில் இறந்து கிடந்தது காணாமல் போன பெருமாள் என்பது தெரிய வந்தது.
மாயமான முதியவர் வாய்க்காலில் பிணமாக மீட்பு
Published on

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பி யூர் அருகே உள்ள வெள்ளாள பாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). சலவை தொழிலாளி.

இவர் கடந்த 6 நாட்க ளுக்கு முன்பு மாயமானதாக அவரது மகன் ராம ச்சந்திரன் என்பவர் வர ப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கோபி அருகே உள்ள செம்மாண்டபாளையம் சின்னப்பாலம் என்ற இடத்தில் கீழ்பவானி ஆற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வாய்க்காலில் இறந்து கிடந்தது காணாமல் போன பெருமாள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வர ப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com