என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்த முதியவர் கைது
    X

    போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்த முதியவர் கைது

    • போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்த முதியவர் கைது செய்யபட்டார்
    • அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார்.

    பவானி,

    பவானி மற்றும் சித்தோடு பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பவானி, சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பவானி, சொக்காரம்மன் நகர் பகுதியில் போலீசார் தீடீர் சோதனை மேற் கொண்டனர். அப்போது அதே பகுதி யை சேர்ந்த வில்சன் (63) என்பவர் மாருதி வேனில் கடைகளுக்கு சென்று சில்லறை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

    அப்போது கடந்த சில மாதங்களாக வில்சன் தனது விற்பனை வேனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. இந்நிலையில் சம்பவத்த ன்று சித்தோடு அருகே உள்ள பட்டரை மேடு பகுதி யில் ஒரு வீட்டின் அருகே வில்சன் வேனை நிறுத்தி இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் போலீசார் அவர் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 140 கிலோ மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்த னர். அதே போல் அவர் பவானியில் உள்ள ஒரு வீட்டில் அவர் வசித்து வரு கிறார். இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து வில்சன் தங்கி இருந்த சொக்காரம்மன் நகர் பகுதியில் உள்ள வீட்டின் அருகே தனது உறவினர் வீட்டில் சுமார் 60 கிலோ மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் பதுக்கி இருந்தது சோதனையில் தெரியவந்தது.

    இதையடுத்து பவானி மற்றும் சித்தோடு பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 200 கிலோ குட்கா, பான் மசாலா மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனும் பறி முதல் செய்யப்பட்டது. இது குறித்து பவானி மற்றும் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து வில்சனை சித்தோட்டில் கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார்.

    Next Story
    ×