என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோதமாக மதுவிற்ற 6 பேர் கைது
    X

    சட்டவிரோதமாக மதுவிற்ற 6 பேர் கைது

    • சட்டவிரோதமாக மதுவிற்ற 6 பேர் கைது செய்யபட்டார்
    • விற்ப னைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    நம்பியூர்,

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கடத்தூர், பெருந்துறை, ஈரோடு தெற்கு, புளிய ம்பட்டி, கவுந்தப்பாடி. நம்பியூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது அழுகுளி, பெருந்துறை, சூரம்பட்டி வலசு, புளியம்பட்டி, கவுந்த ப்பாடி, நம்பியூர் சுற்றுவ ட்டார பகுதிகளில் அனுமதி யின்றி சட்ட விரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் மருதவாயலை சேர்ந்த காசி மகன் கோபால் (வயது 46), அதே மாவட்ட த்தைச் சேர்ந்த பெரியகோ ட்டை அழகர் மகன் பாண்டி கண்ணன் (29), சூரம்ப ட்டிவலசு சாஸ்திரி சாலையை சேர்ந்த சங்கரன் மனைவி ருக்குமணி (46), கும்பபாளையம் பகுதி யைச் சேர்ந்த மூர்த்தி (49), பவானி மேற்கு பாரதிநகரை சேர்ந்த செங்கோட்டையன் மகன் அன்பு என்ற அன்ப ரசன் (31), குருமந்தூர் மேடு தமிழ் நகரை சேர்ந்த சீதாராம் (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×