என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் நீர் தேக்க பகுதியில் கல்லூரி மாணவர் மூழ்கி பலி
    X

    பவானிசாகர் நீர் தேக்க பகுதியில் கல்லூரி மாணவர் மூழ்கி பலி

    • பவானிசாகர் நீர் தேக்க பகுதியில் கல்லூரி மாணவர் மூழ்கி பலியானார்
    • இதுகுறித்து பவா னிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புளியம்பட்டி,

    கோவை மாவட்டம் கணபதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ஜோசப் (வயது 19). இவர் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில் ஜோசப் இவருடைய நண்பர் சரவ ணன் உள்ளிட்ட 6 பேர் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து பவா னிசாகர் சித்தன் குட்டை கருப்பராயன் கோவில் அருகில் உள்ள நீர் தேக்க பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது ஜோசப், சரவ ணன் ஆகியோர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சசைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோ தித்த மருத்துவர்கள் ஜோசப் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். சரவ ணன் அங்கு முதலுதவி சிகி ச்சை பெற்று கோவை தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இதுகுறித்து பவா னிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×