என் மலர்
ஈரோடு
- சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது.
சென்னிமலை:
பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக கருதி பெருமாள் வழிபாடு செய்வர். பலரும் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்வது வழக்கம்.
புரட்டாசியில் வரும் சனிக்கிழமை மேலும் சிறப்பு வாய்ததாக கருதப்படுகிறது.
நேற்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் அமாவசையும் இணைந்து வந்ததால் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.
இதனால் சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையம் ஆதிநாரயணப்பெருமாள் கோவிலில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். 11 மணிக்கு பெருமாள் தாயாருடன் சகடை தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.
சென்னிமலை டவுன் ஈங்கூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணு விற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
அதை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருங்கத்தொழுவு அணியரங்க பெருமாள் மலை கோவிலிலும் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
- செல்போன் டவர் வசதி இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
- அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரத்திற்கு உட்பட்ட கேர்மாளம் ஊராட்சி பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கும், நீலகிரி மக்களவை தொகு திக்கும் உட்பட்டதாகும்.
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை வழியாக கொள்ளேகால் செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம் கிராமம் உள்ளது.
இந்த ஊராட்சியில் மொத்தம் 7 வார்டுகள் உள்ளன. கேர்மாளம் அருகே பூதாளபுரம், தலூதி, வி.எம்.தொட்டி, குடியூர், குட்டை தொட்டி, ஜே.ஆர்.எஸ்.புரம், ஜோதிகவுண்டனூர், சிக்குனிசாபாளையம், ஒரத்தி, கானக்கரை ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகி ன்றனர். இப்பகுதி மக்களுக்கு பிரதான தொழிலே விவசாயம் மட்டும் தான்.
இப்பகுதியில் சோளம், ராகி, சின்ன வெங்காயம், , உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், மஞ்சள் போன்ற பல பயிர்கள் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
இப்பகுதி மக்களுக்கு தமிழக-கர்நாடகா மாநிலம் எல்லை பகுதியில் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள உடையார் பாளையம் பகுதி தான் பஜார். அங்கு சென்று தான் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இல்லை என்றால் சுமார் 50 கிலோ மீட்டர் பயணம் செய்து சத்திய மங்கலம் வரவேண்டும். இதனிடையே இப்பகுதியில் செல்போன் டவர் வசதி முற்றிலும் இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்த பகுதி மக்கள் கூறும்போது, கேர்மாளம் சோதனை சாவடி பகுதியில் மட்டுமே டவர் கிடைக்கும். அதுவும் ரோமிங், கர்நாடகா மாநிலத்தவர்களுக்கு மட்டும்தான். சோதனை சாவடி அருகே உள்ள வீடுகளுக்கு கூட டவர் கிடைக்காது.
விவசாயிகள் தங்களது பொருட்களை மேட்டு ப்பாளையம் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வார்கள். அதற்காக வாகனங்களை அழைக்க வேண்டும்.
விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சோதனை சாவடி வரை வர வேண்டும். சேர்மாளம் பகுதிக்கு சத்தியமங்கலம், கோவையில் இருந்து பஸ் வசதி உள்ளது.
சொந்த பந்தங்கள் ஊருக்கு வருவது கூட தெரிவிக்க வசதி இல்லை. எங்கள் பகுதி மக்களுக்கு உடல்நிலை சரியி ல்லை என்றால் ஆம்புல ன்சுக்கு கூட தகவல் தெரிவி க்க முடியாத சூழ்நிலை உள்ளது.
மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதிக்கு வெளியே நடமாடுவது சிரமம் யானை, புலி என வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இரு க்கும்.
எனவே இப்பகுதியில் தனியார் அல்லது அரசு சார்பில் டவர் அமைத்து மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- சிறுமியை செல்வகணேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- பெருந்துறை போலீசார் செல்வகணேசை கைது செய்தனர்.
பெருந்துறை:
சென்னிமலை அருகே உள்ள பிடாரியூரை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 22). இவருக்கும் பெருந்துறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை செல்வகணேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வகணேசை கைது செய்தனர்.
- பூச்சாட்டுகளுடன் திருவிழா தொடங்கியது.
- பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி அடுத்து நம்பியூர் சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளது.
இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் அத்தனூர் அம்மன் கோவில் முன்பு அதிகாலை எருமை கிடாயினை வெளியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதைக்கண்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக புளியம்பட்டி, குட்டகம், மாதம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
விழாவினை புளியம்பட்டி இளங்காளி கவுடர் மற்றும் பூசாரி கவுடர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நாளை இரவு கம்பம் நடப்பட்டு திருவிழாவானது தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
- பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாம்ராஜ் மகன் சங்கர் (வயது 41). லாரி டிரைவர் ஆவார்.
இவர் நேற்று லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு பவானி அருகே ஜீவா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஏஜென்சியில் லோடு இறக்க வந்துள்ளார்.
இந்நிலையில் டிரைவர் சங்கர் ஓய்வு அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோது சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ட்ரோன் கேமிரா மூலம் காட்டுயானையை வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மயக்க ஊசி செலுத்தி பிடித்து கும்கி யானைகளின் உதவியுடன் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து விள மூண்டி வன சரகத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வை குறைந்த ஒற்றை காட்டுயானை கிராமத்துக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு வந்த விலை நிலங்களில் வாழை மரங்களை சேதப்படுத்தியும் மற்றும் வனத்துறையினர் வாகனத்தையும், வீடுகளையும், தண்ணீர் குழாய்களையும், கம்பி வேலைகள் ஆகியவ ற்றை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தியும் சென்றது.
இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த ஒற்றை காட்டு யானையை மய க்க ஊசி செலுத்தி பிடி க்கும்மாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனைத்தொ டர்ந்து வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கபில்தேவ் மற்றும் முத்து என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.
மேலும் வாழை மரங்களை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தி சென்று வனப்பகுதிக்குள் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்காக வன அதிகாரி கள் உட்பட 15 பேர் கொண்ட வனத்துறையி னர் குழுக்களாக இணைந்து சென்று 2 நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் இது வரை அந்த ஒற்றை காட்டு யானை வனத்துறையினர்கள் பார்வையில் தட்டுப்ப டவில்லை. மேலும் தொடர்ந்து இன்று 3-வது நாளாக வனப்பகுதியில் ட்ரோன் கேமிரா மூலம் காட்டுயானை எங்கு உள்ளது என கண்காணித்து தேடும் பணியில் ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் தலைமையில் 15 பேர் கொண்ட வனத்துறையின ர்கள் குழுக்களாக பிரிந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி காட்டு யானையை பார்த்தவுடன் கும்கி யானைகளுடன் சென்று மயக்க ஊசி செலுத்தி பிடித்து கும்கி யானைகளின் உதவியுடன் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 821-க்கு விற்பனையானது.
அறச்சலூர்:
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 11 ஆயிரத்து 96 எண்ணிக்கையிலான 4 ஆயிரத்து 354 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.21.89-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.76-க்கும், சராசரி விலையாக ரூ.24.89 என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 821-க்கு விற்பனையானது.
- பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து இருந்தனர்.
- சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சலாடி குதுகளித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து இருந்தனர்.
இதை தொடர்ந்து குழந்தை களுடன் வந்து இருந்த அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடினர். மேலும் பெண்கள் பலர் சறுக்கு விளையாடி ஒருவருக்கொருவர் குதுகளித்தனர்.
பவானிசாகருக்கு இன்று காலை குறைந்த அளவே மக்கள் வந்து இருந்தனர். ஆனால் நேரம் செல்ல, செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண ப்பட்டது.
இைததொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் புல் தரைகளிலும் சிறுவர்கள் பலர் விளையாடினர்.
மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சலாடி குதுகளித்தனர். ெபாது மக்கள் அந்த பகுதி யில் இயற்கையை ரசித்து சென்றனர்.
இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகையும் சுற்றுலா பயணிகள் ரசித்தனர். மேலும் அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் அவர்கள் ருசித்தனர்.
இதனால் பவானிசாகர் பூங்கா பகுதியில் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.
- தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
- மொத்தம் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 036-க்கு விற்பனையானது.
மொடக்குறிச்சி:
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
இதில் 118 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 797 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனையான பருப்பில்
முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.79.79 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.81.09 காசுகள், சராசரி விலையாக ரூ.80.76 காசுகள் என்ற விலைகளிலும்,
2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.90 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.74.29 காசுகள், சராசரி விலையாக ரூ.71.05 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 036-க்கு விற்பனையானது.
- ஜோதிமணி மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டார்.
- இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி முனியப்பன் கோவில் தெரு வை சேர்ந்தவர் செங்கோ ட்டையன். இவரது மகள் ஜோதிமணி (வயது 31).
இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளிப்பட்டி கொண்டைய ம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஜோதிமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கண வரை விட்டு பிரிந்து தந்தை செங்கோட்டையன் பராம ரிப்பில் வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது
இதையடுத்து உடல்நிலை பாதித்த ஜோதிமணி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்ப வத்தன்று ஜோதிமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.
இதில் ஜோதிமணி உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து அவரது அண்ணன் மணிக ண்டன் அப்பாகூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த தங்கவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த துரைச்சாமி மகன் தங்கவேல் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மங்களகிரி பெருமாள் கோவிலில் அதிகமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பெருமாள்மலை மங்கள கிரி பெருமாள் ஏராளமான பக்தர்களுக்கு குல தெய்வ மாக இருந்து வருகிறார். இதனால் புரட்டாசி மாதத்தையொட்டி பக்த ர்கள் பலர் மாலை அணிந்து விரதம் இருந்து வரு கிறார்கள்.
இதை தொடர்ந்து புரட்டாசி கடைசி சனி க்கிழமை என்பதால் பக்தர்கள் பலர் ஈரோடு மற்றும் பவானி பகுதிகளில் இருந்து நேற்று இரவு முதலே குவிய தொடங்கினர்.
இதை தொடர்ந்து அவர்கள் மலை அடிவார த்தில் கூடாரம் அமைத்து ெபருமாள் படம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதையடுத்து நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்
இதை தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணி அளவில் பக்தர்கள் பலர் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் செம்மாலைகள் (பெரிய அளவிலான செருப்புகள்) கொண்டு வந்து ஊர்வலமாக சென்று மலை மீது உள்ள மரத்தி ல் கட்டி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி அதி காலை 2 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஈரோடு, பவானி மற்றும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஆயிரக்கண க்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் பக்தர்கள் பலர் மொட்டை அடித்து பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்தினர். இதனால் பெருமாள் மலையில் இரவு முதல் விடிய, விடிய பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.
தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் காலை வரை சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து இன்று அதி காலை பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டது.
கோபி அருகே உள்ள மூல வாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்றும் வாச னை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவில், கொள ப்பலூர் பெருமாள் கோவில், அழுக்குளி பெரு மாள் கோவில், மேட்டுவளவு பெரு மாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அந்தியூர் வரதராஜ பெரு மாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், உள்ளி ட்ட கோவில்களில் புரட்டாசி கடைசி சனி க்கிழமையை யொட்டி சிறப்பு அலங்கார த்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாளித்தார். அந்தியூர் பேட்டை திருப்பதி பேட்டை பெருமாள் கோவிலில் சனிக்கி ழமை மற்றும் அமாவாசையையொட்டி கோ பூஜை நடந்தது.
அந்தியூர் தவிட்டுப்பாளை யம், வெள்ளையம்பாளை யம், சின்னத்தம்பி பாளை யம், அண்ணா மடுவு, கந்த ம்பாளை யம், பச்சாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்த ர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
இதையொட்டி கவுந்த ப்பாடி சந்தைபேட்டை பழ மையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேம் செய்ய ப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலி த்தார். இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.
இதையொட்டி இன்று காலை முதலே ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்திருந்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தொட ர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.






