search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mariamman temple festival"

    • பூச்சாட்டுகளுடன் திருவிழா தொடங்கியது.
    • பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அடுத்து நம்பியூர் சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் அத்தனூர் அம்மன் கோவில் முன்பு அதிகாலை எருமை கிடாயினை வெளியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதைக்கண்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக புளியம்பட்டி, குட்டகம், மாதம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

    விழாவினை புளியம்பட்டி இளங்காளி கவுடர் மற்றும் பூசாரி கவுடர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நாளை இரவு கம்பம் நடப்பட்டு திருவிழாவானது தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தாராபுரம் அருகே உள்ள மடத்துப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாாியம்மன் கோவில் உள்ளது.
    • 10-ந்தேதி பொங்கல், முளைப்பாறி எடுத்துவருதல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது.

    திருப்பூர்:

    தாராபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாமன் மகன் மீது மஞ்சள் நீரை ஊற்றி இளம்பெண்கள் விளையாடுவதால், அதிகமான பாசம் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.

    தாராபுரம் அருகே உள்ள மடத்துப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாாியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

    இதையடுத்து அன்று காலை புனித நீா் எடுத்து வரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது. 10-ந்தேதி பொங்கல், முளைப்பாறி எடுத்துவருதல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னா் 11-ந்தேதி காலை பாரம்பாிய நிகழ்ச்சியான மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது. அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் ஏற்கனவே தாங்கள் தயாா் செய்து வைத்து இருந்த மஞ்சள் நீரை தங்கள் மாமன் மகன் மற்றும் மாமன் மகள் மீது ஊற்றி விளையாடினா். இதனால் உறவு பலப்படும், நோய்கள் தீரும், மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    அதன்படி மாமா மகன் மீது அத்தை மகள்களும், அத்தை மகள் மீது மாமன் மகன்களும் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் கலந்த நீரை ஊற்றி கொண்டாடினர். 

    • விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.
    • ஏப்ரல் 18 முதல் அடுத்த மாதம் மே 5-ந் தேதி வரை நடைபெறும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒன்றியம், பச்சாபாளையம் ஊராட்சி, கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கால்நடை சந்தை நடைபெறும். இந்த கால்நடை சந்தைக்கு ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள், கால்நடை சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.

    இந்த ஆண்டு 2023 ஏப்ரல் 18 முதல் அடுத்த மாதம் மே 5-ந் தேதி வரை நடைபெறும் கால்நடை சந்தை மற்றும் தற்காலிக கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமம் ரூ. 79 ஆயிரத்து 700 க்கு ஏலம் விடப்பட்டது.

    • மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
    • கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 4-ந்் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தேவாங்கர் சமூகத்தின் சார்பில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக தளி சாலை பூமாலை சந்து பகுதியிலுள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள் துணியா லான கொடி மாரியம்மன் உருவப்படத்துடன் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கொடி மரத்துக்கு முன்பு ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கையில் பூவோடு ஏந்தி சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணியளவில் அம்மன் புஷ்ப அலங்காரத்துடன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. கோவிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்ற அம்மன் திருவீதி உலாவின் போது வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுலவர் வெ.பி.சீனிவாசன், யூ.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், தேவாங்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஏ.சீனிவாசன், அறங்காவலர் கிருஷ்ணராஜ், வி.பி.எஸ்.ஆர்.பிரகாஷ், கொங்கு ரவி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்செங்கோட்டில் ஐப்பசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா வந்து அம்மன், மின்விளக்கு வெளிச்சத்தில் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் ஐப்பசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு பொங்கல் விழாவின்போது அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா வந்து அம்மன், மின்விளக்கு வெளிச்சத்தில் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.

    இந்த நிகழ்ச்சி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்குளத்தில் வறட்சியால் தண்ணீர் இல்லாத காரணத்தால் குளம் சீரமைப்பு பணிக்காக நிறுத்தபட்டது. தற்போது மழை காரணமாக தெப்பகுளத்தல் தண்ணீர் நிரம்பி உள்ளது.

    இதையடுத்து தெப்ப உற்சவம் மீண்டும் நடத்த வேண்டும் என ெபாதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை வைக்கபட்டதை அடுத்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் நகராட்சி சேர்மேன் நளினி, நகராட்சி ஆணையாளர் கணேசன், நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் குணசேகரன்,நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தமிழ்செல்வி, இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் சுரேஷ், சிவாச்சரியார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோ சனைக்கூட்டதிற்கு பின்பு தெப்ப உற்சவம் நடைபெற அனுதி அளிக்கபட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்பு தெப்ப உற்சவம் நடைபெற அனுமதி கிடைக்க பெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தெப்பத்தேர் நிகழ்ச்சி நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 4மணிக்கு தொடங்குகிறது.

    ஜோதிஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஹள்ளி கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன் கோவில்  திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கொண்டாடி வருகின்றனர்.

     திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று  அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
    இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு தட்டுவரிசை எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். 

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு  அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.  இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், மந்திரி கவு ண்டர், நாட்டு கவுண்டர், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
    சீரியம்பட்டி கிராமத்தில் ஞானஸ்ரீமாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞானஸ்ரீமாரியம்மன் கோவில்  திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  இதில் சீரியம்பட்டி, ஈச்சம்பள்ளம், சீரண்டபுரம் ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கொண்டாடி வருகின்றனர்.

     இத்திருவிழாவானது கடந்த 29-ம் தேதி ஏரிக் கோடி முனியப்பன் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று  அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு தட்டுவரிசை எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு  அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.  இவ்விழா ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், நாட்டு கவுண்டர், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
    முத்துப்பேட்டை தெற்குக்காடு மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்து சென்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குகாடு மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத திருவிழா தொடங்கியது. முதல் நாளன்று கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலில் இருந்து உற்சவமூர்த்தி அம்பாள் விக்கிரகம் எடுத்துவரப்பட்டது. மறுநாள் அம்பாளுக்கு சந்தனகாப்பும் திருவிளக்கு பூஜையும் நடந்தது. மூன்றாம் நாள் சிறப்பு அபிசேக ஆராதனையும் வழிபாடுகளும் நடந்தது.

    இதேபோல் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்த நிலையில் நிறைவு நாள் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காலை திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள வெள்ளக்குளத்திலிருந்து ஏராளமான பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்து சென்றனர். பின்னர் பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்தனர். 

    காவடி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய வழியாக சென்று கோவிலை அடைந்தது. பின்னர் மதியம் கோவிலில் அபிஷேக ஆராதனை, வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக்காப்பு கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. பின்னர் நேற்று இரவு அம்மன் வீதி ஊர்வலம் வாண வேடிக்கையுடன் தொடங்கி முக்கிய பகுதிகளுக்கு சென்றது. அப்பொழுது குமரன் பஜார் அருகே அம்மனுக்கு வரகரிசி மாலை போட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாமி ஊர்வலம் கோவிலை சென்றடைந்து திருவிழா நிறைவுபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம வாசிகள் செய்திருந்தனர்.

    ×