என் மலர்

  நீங்கள் தேடியது "setting herself on fire"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
  • சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

  ஈரோடு:

  ஈரோடு அடுத்த ஞானி பாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (36). தொழிலாளி. இவரது மனைவி சங்கீதம் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

  இந்நிலையில் சங்கீதத்தி ற்கும், யுவராஜிக்கும் அவர்க ளது மகனை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்ப ட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மனவேதனை அடைந்து சம்பவத்தன்று வீட்டின் கழிப்பறைக்குள் சென்று கதவை தாழிட்டு, மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

  இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது குறித்து சங்கீதத்தின் தந்தை ஈஸ்வரன் வெள்ளோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×