ஐ.டி. பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை

உடலில் தீ எரிந்த படி கீர்த்தனா அலறி துடித்துள்ளார். சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.டி. பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை
Published on

சென்னிமலை:

சென்னிமலையில் உள்ள பி.ஆர்.எஸ். ரோட்டை சேர்ந்தவர் கைலாசநாதன். இவருடைய மகள் கீர்த்தனா (30). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கீர்த்தனா கடந்த 10 ஆண்டுகளாக தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். மேலும் இதற்கான சிகிச்சை அளித்தும் சரி ஆகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கைலாசநாதனும் அவரது மகன் சேதுராமனும் படுக்கையறையில் தூங்கியுள்ளனர்.

கீர்த்தனா ஹாலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் கீர்த்தனாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக கைலா சநாதனும், அவரது மகன் சேதுராமனும் எழுந்து சென்று பார்த்த போது அங்கு உடலில் தீ எரிந்தபடி கீர்த்தனா அலறி துடித்துள்ளார்.

இதுகுறித்து கீர்த்தனாவிடம் கைலாசநாதன் கேட்டபோது, எறும்பு மருந்தை தின்றுவிட்டு பின்னர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறியுள்ளார்.

பின்னர் உடனடியாக கீர்த்தனாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com