லாரி டிரைவர் திடீர் சாவு

சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரி டிரைவர் திடீர் சாவு
Published on

பவானி:

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாம்ராஜ் மகன் சங்கர் (வயது 41). லாரி டிரைவர் ஆவார்.

இவர் நேற்று லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு பவானி அருகே ஜீவா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஏஜென்சியில் லோடு இறக்க வந்துள்ளார்.

இந்நிலையில் டிரைவர் சங்கர் ஓய்வு அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோது சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com