என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villagers suffer due to"

    • செல்போன் டவர் வசதி இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
    • அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரத்திற்கு உட்பட்ட கேர்மாளம் ஊராட்சி பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கும், நீலகிரி மக்களவை தொகு திக்கும் உட்பட்டதாகும்.

    சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை வழியாக கொள்ளேகால் செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம் கிராமம் உள்ளது.

    இந்த ஊராட்சியில் மொத்தம் 7 வார்டுகள் உள்ளன. கேர்மாளம் அருகே பூதாளபுரம், தலூதி, வி.எம்.தொட்டி, குடியூர், குட்டை தொட்டி, ஜே.ஆர்.எஸ்.புரம், ஜோதிகவுண்டனூர், சிக்குனிசாபாளையம், ஒரத்தி, கானக்கரை ஆகிய கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகி ன்றனர். இப்பகுதி மக்களுக்கு பிரதான தொழிலே விவசாயம் மட்டும் தான்.

    இப்பகுதியில் சோளம், ராகி, சின்ன வெங்காயம், , உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், மஞ்சள் போன்ற பல பயிர்கள் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

    இப்பகுதி மக்களுக்கு தமிழக-கர்நாடகா மாநிலம் எல்லை பகுதியில் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள உடையார் பாளையம் பகுதி தான் பஜார். அங்கு சென்று தான் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    இல்லை என்றால் சுமார் 50 கிலோ மீட்டர் பயணம் செய்து சத்திய மங்கலம் வரவேண்டும். இதனிடையே இப்பகுதியில் செல்போன் டவர் வசதி முற்றிலும் இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்த பகுதி மக்கள் கூறும்போது, கேர்மாளம் சோதனை சாவடி பகுதியில் மட்டுமே டவர் கிடைக்கும். அதுவும் ரோமிங், கர்நாடகா மாநிலத்தவர்களுக்கு மட்டும்தான். சோதனை சாவடி அருகே உள்ள வீடுகளுக்கு கூட டவர் கிடைக்காது.

    விவசாயிகள் தங்களது பொருட்களை மேட்டு ப்பாளையம் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வார்கள். அதற்காக வாகனங்களை அழைக்க வேண்டும்.

    விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சோதனை சாவடி வரை வர வேண்டும். சேர்மாளம் பகுதிக்கு சத்தியமங்கலம், கோவையில் இருந்து பஸ் வசதி உள்ளது.

    சொந்த பந்தங்கள் ஊருக்கு வருவது கூட தெரிவிக்க வசதி இல்லை. எங்கள் பகுதி மக்களுக்கு உடல்நிலை சரியி ல்லை என்றால் ஆம்புல ன்சுக்கு கூட தகவல் தெரிவி க்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதிக்கு வெளியே நடமாடுவது சிரமம் யானை, புலி என வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இரு க்கும்.

    எனவே இப்பகுதியில் தனியார் அல்லது அரசு சார்பில் டவர் அமைத்து மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×