ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 821-க்கு விற்பனையானது.
ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
Published on

அறச்சலூர்:

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 11 ஆயிரத்து 96 எண்ணிக்கையிலான 4 ஆயிரத்து 354 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.21.89-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.76-க்கும், சராசரி விலையாக ரூ.24.89 என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 821-க்கு விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com