என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் ரகசிய அறை இருந்தது.
    • பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, அக். 21-

    ஈரோடு கொல்லம் பாளையம்-சோலார் பிரிவு அருகே இன்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அந்த வாகனத்தில் 4 பேர் இருந்தனர். அவர்களை விசாரித்த போது அவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த சத்யராஜ், விக்னேஷ், உதயகுமார், செல்வம் என தெரிய வந்தது.

    சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் ரகசிய அறை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 42 பெட்டிகளில் 2,016 மது பாட்டில்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து மதுவிலக்கு போலீசார் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாய்க்காலில் மனோகரன் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, அக். 21-

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் செண்பகபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம நாயக்கர் மனைவி சின்ன ம்மாள் (வயது 70). இவரது மகன் மனோகரன் (45).

    இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலை யில் சம்பவத்தன்று மனோ கரன் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்க ளில் தேடி பார்த்தும் மனோ கரன் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பவர் ஆபீஸ்-ஒப்பலவடனூர் ரோட்டில் ஒரு தோட்டத்தின் பக்கத்தில் உள்ள கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் மனோகரன் விழுந்து கிடப்பதாக சின்னம்மாளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சின்ன ம்மாள் மற்றும் உறவினர்கள் மனோகரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சக்தி யமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் மனோகரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து சின்னம்மாள் சத்தியமங்க லம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்து 970-க்கு தேங்காய் பருப்பு மற்றும் எள் ஆகியவை விற்பனையானது.

    மொடக்குறிச்சி, அக்.21-

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 84 மூட்டை கள் கொண்ட 3 ஆயிரத்து 510 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.82.83 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.85.65 காசுகள், சராசரி விலையாக ரூ.84.65 காசுகள் என்ற விலை களிலும் ,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.65.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.79.60 காசுகள், சராசரி விலையாக ரூ.73.19 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 243-க்கு விற்பனையானது.

    இதேபோல சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் நடந்த ஏலத்தில் 283 கிலோ எடையுள்ள எள் விற்பனை யானது. விற்பனையான எள்ளில் கருப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறை ந்த பட்ச விலையாக ரூ.166.29 காசுகள்,

    அதிகபட்ச விலை யாக ரூ.166.29 காசுகள், என்ற விலை களிலும் சிவ ப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.176.99 காசுகள், அதிக பட்ச விலை யாக ரூ.176.99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.48 ஆயிரத்து 727-க்கு விற்பனையானது.

    மொத்தம் அவல்பூந்துறை மற்றும் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்க ளில் சேர்த்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்து 970-க்கு தேங்காய் பருப்பு மற்றும் எள் ஆகியவை விற்பனையானது.

    • ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் இங்கு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் படிப்புக்காக, தொழிலு க்காக, வேலைக்காக சொந்த ஊரைவிட்டு ஈரோடு மாவ ட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இவ்வாறு வேறு மாவட்ட ங்களை சேர்ந்தவர்கள் தொடர் விடுமுறை கார ணமாக சொந்த ஊரை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காண ப்படும். தற்போது சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.

    அதாவது சனி, ஞாயிறு, திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை விடுமுறை, செவ்வா ய்க்கிழமை விஜயதசமி விடுமுறை என தொடர்ந்து 4 4 நாட்கள் விடுமுறை வருகிறது

    இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் படை எடுக்கத் தொடங்கியு ள்ளனர். நேற்று மாலை ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக கோவை, சேலம், மதுரை, கரூர் செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. திருநெல்வேலி, சென்னை, நாகர்கோவில் போன்ற தொலைதூர பயணத்திற்கு மக்கள் முன் பதிவு செய்திருந்தனர்

    இதனால் அனைத்து பஸ்களும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மக்கள் குடும்பம் குடும்பமாக சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் இருந்தனர். வார இறுதி நாட்களில் பயணிகள் சிரமமின்றி செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 52 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதே போல் ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்க த்தை விட இன்று காலை பயணிகள் கூட்டம் அதி கமாக இருந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் எந்த ஒரு சிரம மின்றி தங்கள் குடும்பத்துடன் சென்றனர்.

    முன் பதிவு செய்யாத பயணிகள் ெரயி லில் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்ட னர். குறிப்பாக திருநெ ல்வேலி, சென்னை, மதுரை செல்லும் ெரயி ல்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது.

    முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜனனிக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கல்லூரி மாணவி மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கள்ளியம்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அலமுலு (38). இவர்களது மகள் ஜனனி (19). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜனனிக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் பாதித்த ஜனனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர்.
    • கோவைக்கு நேரில் வரவழைத்து டி.ஐ.ஜி சரவண சுந்தர் பாராட்டி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் கணபதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் துரைசாமி வீட்டில் 150 பவுன் தங்க நகை ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி கொள்ளை போனது. சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு கொ ள்ளையனை தேடி வந்தனர்.

    இதில் 2 ஆயிரம் சி.சி.டி.வி கேமிரா பதிவுகள், ஆயிரக்கணக்கான பழங்குற்றவாளிகள் நடத்தைகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்ற வாலிபர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

    அவரை பிடிக்க ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர். இறுதியில் கடந்த 1-ந் தேதி ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆனந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான கொள்ளையன் ஆனந்தகுமார் மீது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள லும் சேர்த்து 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்கும் குழுவில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சோம சுந்தரம், சண்முகம் உள்ளிட்ட 14 பேர் கொண்ட க்ரைம் டீம் போலீ சார் இருந்தனர்.

    இவர்களுக்கு ஏற்கனவே ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி உள்ளிட்ட 14 பேரையும் கோவைக்கு நேரில் வரவழைத்து டி.ஐ.ஜி சரவண சுந்தர் பாராட்டி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

    • எதிர்பாராத விதமாக சரவணன் கீழே தவறி விழுந்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ராணா நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 76). இவரது மகன் சரவணன் என்ற சரவணகுமார் (47). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி கௌரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதையடுத்து சரவணன் குடும்பத்தை விட்டு பிரிந்து உறவினர்கள் யாரிடமும் பேசாமல் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் அருகே காவிரி ஆற்றில் படித்துறையில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக சரவணன் கீழே தவறி விழுந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்தவ ர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சர வணன் என்ற சரவணகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை சண்முகம் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • நகை கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
    • இதனைத்தொடர்ந்து கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    ஈரோடு:

    திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு ஜூவல்லரி நகைக்கடை பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி முதலீட்டு தொகை பெற்றது. மேலும் முதலீட்டு தொகைக்கு தங்க நகைகள் வழங்கும் திட்ட த்தையும் செயல்படுத்தியது.

    ஆனால் பொதுமக்களிடம் முதலீட்டு தொகைக்கு முறையாக வட்டித்தொகை வழங்காமலும், நகைத் திட்டத்திற்கு நகைகளை வழங்காமல் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதன் பேரில் அந்த ஜூவல்லரி நகைக் கடை மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தமிழகம் முழுவதும் 11 இடங்களில் அந்த ஜூவல்லரி நகை கடைகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் காவிரி சாலையில் உள்ள ஜூவல்லரி நகை கடையில் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதனைத்தொடர்ந்து கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    • சென்னிமலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி கிறிஸ்தவ போதகரான அர்ஜூனன் என்கிற ஜான் பீட்டர் என்பவர் தனது வீட்டில் வழிபாடு நடத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வழிபாடு நடத்த அதே பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டதோடு ஜான்பீட்டர் தாக்கப்பட்டார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னிமலையில் கிறிஸ்தவ முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டு, சென்னிமலை முருகன் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகின்றது.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநில தலைவரான சரவணன்(36), திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன்(40) ஆகிய 2 பேர் மீதும் மதத்தை அவமதித்தல், மத கலவரத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவணனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியாரை போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று பாதிரியார் ஸ்டீபனை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ஆகியோர் உத்திரவின் கீழ் மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்துதலின் படி பவானி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை பவானி நகர அலுவலர் சதீஷ்குமார், வட்டார அலுவலர் லட்சுமி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    15-க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முறை யான லேபிள் விபரம் இல்லாத பிரட் வகைகள் சுமார் 3.5 கிலோ கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

    முட்டை பப்ஸ் வகைகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டி கவர்கள் 1.2 கிலோ கைப்பற்றப்பட்டது.

    இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க செயற்கை நிறம் பயன்படுத்தக்கூடாது எனவும், உரிமம் பெறாத கடைகள் உடனடியாக உரிமம் பெற அறிவுறுத்தப் பட்டு 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு தரம் குறைவு பற்றிய புகாருக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஆப்பக்கூடல், ஈரோடு டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    அப்போது ஈரோடு-கொடுமுடி ரோடு, ஆப்ப க்கூடல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்ய ப்பட்ட கஞ்சா எனும் போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டி ருந்த சத்தியமங்கலம் கட ம்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 22), நாம க்கல் மாவட்டம் குமாரபா ளையம் ஆனந்தராஜ், மர ப்பாலம் சண்முகம் மகன் தமிழ்ச்செல்வன் (31), வெண்டிபாளையம் நடராஜன் மகன் கவுதம் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 52.1 கிலோ கஞ்சா எனும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி தொடங்கியது.
    • மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும்.

    நம்பியூர்:

    ஒருங்கிணைந்த பள்ளி க்கல்வி நம்பியூர் வட்டாரம் பள்ளி கல்வி த்துறையின் கீழ் இயங்கும் அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் 3000 மாணவர் களில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 2023–-24-ம் ஆண்டிற்கான வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி தொடங்கியது.

    இதில் நேற்று முன்தினம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நேற்று 9 முதல் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ஓவியம் வரைதல், அழகு, கையெழுத்து, நாட்டுப்புற ப்பாடல் வில்லுப்பாட்டு, நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி கவிதை போட்டி, செவ்வியல் நடனம், தனிநபர் நடனம், கும்மி நடனம், கரகாட்டம் போன்ற 9 வகையான பிரிவுகளில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த 350 மாணவர்கள் கலந்து போட்டிகளில் பள்ளி ஆசிரியர்களும் 30 கலை வல்லுனர்களும் நடுவர்களாக இருந்தனர்.

    போட்டியில் முதல் 2 இடங்களை பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெறுவர்.மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர்.

    மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும்.

    மேலும் வெற்றி பெறும் மாணவர்களை தரவரிசையில் முதன்மை வரும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    கலை நிகழ்ச்சியில் நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், நம்பியூர் வட்டார கல்வி அலுவலர் வேலுமணி மற்றும் வட்டார வழ மைய மேற்பார்வையாளர் பொறுப்பு செல்வராஜ் மற்றும் தலைமை ஆசிரியர்க ள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

    ×