search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "involved in the scam"

    • நகை கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
    • இதனைத்தொடர்ந்து கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    ஈரோடு:

    திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு ஜூவல்லரி நகைக்கடை பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி முதலீட்டு தொகை பெற்றது. மேலும் முதலீட்டு தொகைக்கு தங்க நகைகள் வழங்கும் திட்ட த்தையும் செயல்படுத்தியது.

    ஆனால் பொதுமக்களிடம் முதலீட்டு தொகைக்கு முறையாக வட்டித்தொகை வழங்காமலும், நகைத் திட்டத்திற்கு நகைகளை வழங்காமல் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதன் பேரில் அந்த ஜூவல்லரி நகைக் கடை மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தமிழகம் முழுவதும் 11 இடங்களில் அந்த ஜூவல்லரி நகை கடைகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் காவிரி சாலையில் உள்ள ஜூவல்லரி நகை கடையில் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதனைத்தொடர்ந்து கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    ×