என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29ம் தேதி) நடைபெற உள்ளது. எனவே நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கி நாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், கே.புதூர், அப்பாவிளைப்பட்டி, குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலி நாயக்கன்பட்டி,

    சுட்டி காலாடிபட்டி, அவ்வையம்பட்டி, பங்களாப்பட்டி, சீத்தாபுரம், தோப்புப்பட்டி, சின்னம்மநாயக்கன் கோட்டை, மணியக்காரன்பட்டி, கோட்டூர், என். ஊத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • நகையை திருடிய மர்மநபர்கள் குறித்து மூதாட்டி போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின்பேரில் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    பழனி:

    சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மனைவி குண்டு மாயி (வயது 80). இவர் பழனி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் சென்னை செல்வதற்காக பழனி ரெயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் ரெயில் நிலையத்தில் கொள்ளையர்கள் அதிகமாக நடமாடி வருகின்றனர்.

    எனவே நீங்கள் அணிந்துள்ள நகைகளை பையில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறினர். அதன்படி அவர் அணிந்திருந்த தோடு மற்றும் சங்கிலியை வாங்கிக் கொண்டு ஒரு பேப்பரில் சுற்றித் தருவது போல கொடுத்து விட்டுச் சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து அந்த பேப்பரை குண்டு மாயி திறந்து பார்த்தார். அப்போது அதில் இரும்பு போல்ட், நட்டுகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட மையத்தின் சார்பில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட மையத்தின் சார்பில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. கொடைக்கானல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பணியாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். எனவே அவரை கண்டித்தும், இடமாறுதல் செய்யக்கோரியும் 2 நாள் தொடர் போராட்டம் நடத்த இருந்தது.

    இந்த நிலையில் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஒரு வாரமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி 30-ந்தேதி முதல் 2-ம் தேதி வரை அனைத்து ஒன்றியங்களிலும் காத்திருப்பு போராட்டம் ஆய்வுக்கூட்டம் நடத்துவது, ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களுக்கு சென்று நோட்டீஸ் வினியோகம் செய்து போராட்டத்தின் அவசியத்தை எடுத்துரைப்பது, மேலும் ஊராட்சி செயலர்கள் நிர்வாக அலுவலரிடம் தொடர் விடுப்பு கடிதம் அளிப்பது மற்றும் புதன்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் தொடர் விடுப்பு எடுத்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
    • காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வருகிற 30-ந் தேதியுடன் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் சுமோட்டோ உள்ளிட்ட தனியார் உணவு நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன.

    கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தையும் உடனடியாக எண்ணி அதில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் மொத்தம் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

    ரொக்கப்பணமாக ரூ.5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830ம், தங்கம் 1419 கிராமும், வெள்ளி 18,185 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1366-ம் கிடைத்துள்ளன. இது தவிர பட்டு, பரிவட்டம், நவதானியங்கள், வெளிநாட்டு கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன.

    காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பே உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை இன்னும் 2 நாட்களில் மாற்றியாக வேண்டும் என்பதால் அங்குள்ள உண்டியல்களையும் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிராமக் கோவில்கள் மற்றும் சமுதாயத்துக்கு பாத்தியப்படட குலதெய்வக் கோவில்களிலும் உண்டியல்கள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    • கல்லூரி, பள்ளிகளில் சிறுதானியம், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    இந்தியாவில் இந்த ஆண்டு சிறுதானிய உணவுப்பொருள் ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் சிறுதானிய உணவு பொரு ட்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கல்லூரி, பள்ளிகளில் சிறுதானியம், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் மாணவ-மாணவிகள் உடல் வலிமை யுடனும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாகவும் மாறுவார்கள் என எடுத்து ரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்க ப்பள்ளியில் இன்று சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, ராகி உள்ளிட்ட தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த உணவுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாண வர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். சிறுதானியங்கள் என்றாலே கூழ், கஞ்சி என்ற எண்ணத்தை மாற்றி இந்த தானியங்களிலும் பல்வேறு நவீன உணவுகளை தயாரி க்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் ஏற்படும் பயன்கள் குறித்து தங்கள் பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி இதனை பயன்படுத்துமாறு தெரி வித்தனர். இதுமட்டுமின்றி செம்பருத்தியால் செய்த உணவு உள்பட பாரம்பரிய உணவுகள் குறித்தும் காட்சிப்படுத்த ப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியை ஜெயந்தி புளோரன்ஸ் மற்றும் ஆசிரி யர்கள் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

    பழனி:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் பழனி ஆர்.எப். ரோடு பகுதியில் நடைபெற்றது. பழனி நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட பொருளாளருமான வேணுகோபாலு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    மாவட்ட அவைத்தலைவர் குப்புச்சாமி, முன்னாள் எம்.பி. குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பழனி நகர அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேசியதாவது,

    அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பா.ஜ.க. கூட்டணியில் இருந்த விலகியதை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து அனைவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. இறுதியில் பா.ஜ.க வேண்டவே வேண்டாம் என்ற கருத்தை கூறினர். அ.தி.மு.க. செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்தில் வளர்ந்து வந்த பா.ஜ.க, அ.தி.மு.க.வையே அழிக்க நினைக்கிறது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை. அவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வருகிறார்.

    கட்சிக்கு வந்து குறைந்த காலமே ஆன அவருக்கு முதல்வராக வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. "என் மண்' என அண்ணாமலை உரிமை கொண்டாட முடியாது. இந்த மண் தமிழ்நாட்டு மண். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வை முன்னிலைப்படுத்தி நடைபயணம் மேற்கொள்ளாமல் தமிழகத்தில் தன் பெயரை அனைவரும் சொல்ல வேண்டும் என்பதற்காக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது.

    அ.தி.மு.க தனது சுயமரியாதையை இழந்து, பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நம் மக்களின், தொண்டர்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு மத்தியில் பிரதமராக மோடியும், தமிழகத்தில் முதல்-அமைச்சராக அண்ணாமலை இருக்க வேண்டும் என்று பா.ஜ.க பேராசை படுகிறது. ஆனால் பா.ஜ.க எனும் வேண்டாத சுமையை தூக்கி எறிந்ததால் அ.தி.மு.க சுதந்திரமாக இருக்கிறது.

    தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மது கலாச்சாரத்தால் தி.மு.க மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 505 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றி விட்டு 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக தி.மு.க மக்களை ஏமாற்றி வருகிறது.

    பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வால் மத்திய அரசு மீதும், விலை வாசி உயர்வு காரணமாக தமிழகத்தில் தி.மு.க அரசு மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர் இவ்வாறு அவர் பேசினார்.

    • மது போதையில் வாலிபரின் தலையில் பீர்பாட்டிலால் அடித்ததால் படுகாயமடைந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை சுண்ணாம்பு காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி மகன் தினேஷ் (வயது 27). ஜோதிடர். இவரது மைத்துனர் மாரிமுத்து. இவர்கள் 2 பேரும் நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சரவணன் மகன் முத்துமணி (வயது 25), முனியாண்டி மகன் அலெக்ஸ் குமார் (22) ஆகிேயார் மோட்டார் சைக்கிளில் மது போதையில் ஏறி தகராறு செய்தனர். அப்போது அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து முத்துமணி ஆத்திரத்தில் மாரிமுத்து தலையில் அடித்தார். இதில் மாரிமுத்து மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது.

    இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடவே முத்துமணி, அலெக்ஸ்குமார் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இதனைத் தொடர்ந்து மாரிமுத்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து தினேஷ் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜிடம் அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து முத்துமணி, அலெக்ஸ் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    • புறா பிடிக்க சென்றபோது எதிர்பா ராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.
    • கிணற்றில் விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே பெரு மாள் கோவில்பட்டி யைச் சேர்ந்தவர் சரவண பாண்டி (வயது 25). இவருக்கு சத்யா என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. சரவண பாண்டி அப்பகுதி யில் புறா பிடிக்கச் சென்றார்.

    அப்போது எதிர்பா ராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேட சந்தூர் தீயணைப்புத்துறை யினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதும் போராடி சரவண பாண்டியை மீட்டனர்.

    ஆனால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சரவண பாண்டியன் உடல் பிரேத பரிசோத னைக்காக திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.
    • 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.

    வடமதுரை:

    எரியோடு அருகே கோவிலூர் கணபதிபுரம் குறிகோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25). பட்டதாரி வாலிபர். இவருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா (வயது 20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வீராப்பூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பின ரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.

    • கடந்த சில வாரங்களாக பள்ளத்து க்கால்வாய் பகுதியில் காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது.
    • ரேஷன் கடைக்கு யானை குட்டியுடன் சென்று கடை யில் உள்ள இரும்பு ஜன்னலை உடைத்து ரேஷன் அரிசி மூடைகளை தூக்கி சேதப்படுத்தின.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பெரியூர், பெருங்கானல், பள்ளத்துகால்வாய், சேம்படி ஊத்து உள்ளிட்ட வனப்பகுதி களில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுகின்றன. இவை தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன.

    இங்கு தொடர்ந்து காட் டுயானை கள் அட்டகாசம் அதிகரி த்துள்ளது. தோட்டங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை அவை சேதப்படுத்தி விடுகின்றன.

    பின்னர் தோட்டங்களு க்குள் புகுந்து காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. சில நேரங்க ளில் காட்டுயானைகளின் தாக்கு தலுக்கு தோட்ட தொழிலாளர்கள் பலியாகி விடுகின்றனர். கடந்த சில வாரங்களாக பள்ளத்து க்கால்வாய் பகுதியில் காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது.

    நேற்று பள்ளத்து க்கால்வாய் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு யானை குட்டியுடன் சென்று கடை யில் உள்ள இரும்பு ஜன்னலை உடைத்து ரேஷன் அரிசி மூடைகளை தூக்கி சேதப்படுத்தின.

    பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றன. செல்லும் வழியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி சென்றது. இது குறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனத்துறை யினர் அங்கு விரைந்து சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சாகச சுற்றுலா கட்டுமான பணிகளுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் மக்கள் வழக்கு தொடர்ந்தனர். இத்திட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.
    • இந்நிலையில் மீண்டும் சுற்றுலாத்துறை சார்பில் சாகச சுற்றுலாத்தலம் அமைக்கும் பணியை தொடங்கியதால் அப்பகுதி மக்கள் நீதிபதியிடம் மனு அளித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 2000 ஏக்கர் பரப்பளவில் புல்வெளிகள் உள்ளன. இந்த இடம் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலாத்துறை மூலம் கவுஞ்சியில் ரூ.1.75 கோடி மதிப்பில் சாகச சுற்றுலாத்தளம் அமைக்கும் பணி நடந்தது.

    இத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் மீன்விதைப்பண்ணை அமைக்க திட்டமிட்டனர். இதனையடுத்து மதுரை ஐகோர்ட்டில் மக்கள் வழக்கு தொடர்ந்தனர். இத்திட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

    இந்நிலையில் மீண்டும் சுற்றுலாத்துறை சார்பில் சாகச சுற்றுலாத்தலம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுஞ்சி பகுதி கிராம மக்கள் கொடைக்கானல் நீதிபதி கார்த்திக்கிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

    கவுஞ்சி பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி சுற்றுலாத்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சாகச சுற்றுலாத்தளம் அமைப்பதற்கான பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து நாங்கள் கேட்டபோது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று தெரிவித்தனர்.

    • 2ம் சீசனை வரவேற்கும் விதமாக ப்ரூனஸ் மலர்கள் பூக்க தொடங்கும். இது டிசம்பர் மாதம் வரை மலைச்சாலைகளில் பூத்து குலுங்கும்.
    • கொடைக்கானல் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி மே,ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநில ங்களிலிருந்து லட்சக்கணக்கா ன சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று சீசனை அனுபவித்து மகிழ்வர் . அருவி மற்றும் மலைச்சாலைகளில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

    இந்த நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதம் 2ம் சீசனை வரவேற்கும் விதமாக ப்ரூனஸ் மலர்கள் பூக்க தொடங்கும். இது டிசம்பர் மாதம் வரை மலைச்சாலைகளில் பூத்து குலுங்கும் . தற்பொழுது கொடைக்கானல் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது .

    இந்த ப்ரூனஸ் மலர்களை காண சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கொடைக்கானலுக்கு வரும் சில சுற்றுலா பயணிகள் இந்த வகை மலர்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    ×