என் மலர்
நீங்கள் தேடியது "ப்ரூனஸ் மலர்கள்"
- 2ம் சீசனை வரவேற்கும் விதமாக ப்ரூனஸ் மலர்கள் பூக்க தொடங்கும். இது டிசம்பர் மாதம் வரை மலைச்சாலைகளில் பூத்து குலுங்கும்.
- கொடைக்கானல் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி மே,ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநில ங்களிலிருந்து லட்சக்கணக்கா ன சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று சீசனை அனுபவித்து மகிழ்வர் . அருவி மற்றும் மலைச்சாலைகளில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதம் 2ம் சீசனை வரவேற்கும் விதமாக ப்ரூனஸ் மலர்கள் பூக்க தொடங்கும். இது டிசம்பர் மாதம் வரை மலைச்சாலைகளில் பூத்து குலுங்கும் . தற்பொழுது கொடைக்கானல் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது .
இந்த ப்ரூனஸ் மலர்களை காண சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கொடைக்கானலுக்கு வரும் சில சுற்றுலா பயணிகள் இந்த வகை மலர்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.






