வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

எரியோடு அருகே கோவிலூர் கணபதிபுரம் குறிகோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25). பட்டதாரி வாலிபர். இவருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா (வயது 20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வீராப்பூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பின ரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும் 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com