என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கொடைக்கானலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • இந்த பேரணியில் ஏராளமான நாட்டு நலப்பணி திட்டத்தினர் கலந்து கொண்டனர்,

    கொடைக்கானல்:

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பாரதியார் பல்கலைக்கழகம் ஸ்ரீவாசவி கல்லூரி மாணவிகள் கொடைக்கானல் வருவாய்த்துறை மற்றும் போலீசாருடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    கொடைக்கானல் வட்டாட்சியர் கார்த்திகேயன் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மஞ்சள் பை பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    இந்த பேரணியில் ஏராளமான நாட்டு நலப்பணி திட்டத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தாமரைக்கண்ணன் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜராஜேஸ்வரி, கலைமணி, அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டுவது சம்பந்தமாக ஒப்பந்ததாரர் ஜமீர் தரப்பினருக்கும் பாபி சிம்ஹா தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
    • பொய்யான தகவல்களை கூறினால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என புகார் அளித்துள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பேத்துப்பாறையில் நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டுவது சம்பந்தமாக ஒப்பந்ததாரர் ஜமீர் தரப்பினருக்கும் பாபி சிம்ஹா தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து விசாரணை நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் பாபி சிம்ஹா தரப்பு விளக்கத்தைக் கேட்டு கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் இருந்து ஜமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் பாபி சிம்ஹா தரப்பு வக்கீல்கள் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இது பற்றி பாபி சிம்ஹா தரப்பு வக்கீல் பாலு கூறியதாவது, போலீஸ் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    பாபி சிம்ஹா இங்கு இல்லாததால் நாங்கள் இதன் அடிப்படையில் எங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளோம். அவர்கள் எங்கள் மீது பொய் புகார் அளித்து உள்ளனர் என்று விளக்கம் அளித்து உள்ளோம். இந்த விஷயம் சம்பந்தமாக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜமீர் தரப்பில் உள்ள உசைன் தொடர்ந்து பொது வெளியில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றார். மீண்டும் அவர் இதுபோன்று பொய்யான தகவல்களை கூறினால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • விளையாடிக்கொண்டிருந்த குழ்நதைகள் ஆதாளை எனப்படும் விஷ செடியின் விதைகளை தின்றனர்.
    • உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மணக்காட்டூரைச் சேர்ந்த ஜீவா (வயது 7), சுரேந்திரன் (5), சந்தானக்குமார் (7), மணிமாறன் (5), சுப்புலெட்சுமி (12), வீரலெட்சுமி (5), கீர்த்திகா (7) ஆகிய 7 குழந்தைகள் தங்கள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கிருந்த ஆதாளை எனப்படும் விஷ செடியின் விதைகளை தின்றனர். இதனால் அவர்களது உடல் நிலை பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். இதனால் குழந்தைகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கேட்டபோது விதைகளை தின்றதாக கூறினர். பின்னர் அவர்களை நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 7 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • அன்னதானத்தில் அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரம் 1000 ஆண்டுகள் பழமையான சடையாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோவிலில் இருந்து சுவாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சடையாண்டி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அதன் பின் சுவாமி பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து சடையாண்டி கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100க்கும் மேற்பட்டஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது. நள்ளிரவில் சடையாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழாவில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவில் தொடங்கிய இந்த அன்னதானம் விடிய விடிய நடந்தது.

    இந்த அன்னதானத்தில் அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இந்த வினோத திருவிழாவை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    • மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் உச்சிகால பூஜையின்போது காப்பு கட்டப்படும். 9ம் நாளான 23-ந்தேதி மலைக்கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதை மங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நவராத்திரி விழாவில் அன்றையதினம் பகல் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மேல் சம்ரோட்ஷண பூஜைக்கு பின்னர் நடை திறக்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • மூதாட்டி அணிந்திருந்த தோடு மற்றும் சங்கிலியை வாங்கிக் கொண்டு ஒரு பேப்பரில் சுற்றித் தருவது போல கொடுத்து விட்டுச் சென்றனர்.
    • ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி:

    சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மனைவி குண்டு மாயி (வயது 80). இவர் பழனி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் சென்னை செல்வதற்காக பழனி ரெயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் ரெயில் நிலையத்தில் கொள்ளையர்கள் அதிகமாக நடமாடி வருகின்றனர். எனவே நீங்கள் அணிந்துள்ள நகைகளை பையில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறினர். அதன்படி அவர் அணிந்திருந்த தோடு மற்றும் சங்கிலியை வாங்கிக் கொண்டு ஒரு பேப்பரில் சுற்றித் தருவது போல கொடுத்து விட்டுச் சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து அந்த பேப்பரை குண்டு மாயி திறந்து பார்த்தார். அப்போது அதில் இரும்பு போல்ட், நட்டுகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 2 மர்மநபர்கள் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற காட்சிகள் வெளியானது.
    • போலீசார் விசாரணை நடத்தி நகை திருடிய தந்தை-மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் மதுரையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் மகனுக்கும், திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடந்தது. அப்போது மணமகன் அறையில் இருந்த 16 பவுன் நகை திருடுபோனது.

    திருமண வீட்டில் கலந்து கொள்வது போல வந்த மர்மநபர்கள் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ்எட்வர்டு, ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணையை தொடங்கினர்.

    திருமண வீட்டில் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்த கேமராமேனிடம் இருந்த வீடியோக்களை போலீசார் பார்வையிட்டனர். இதில் இருவீட்டாருக்கும் சம்பந்தம் இல்லாத நபர்கள் யாரேனும் உள்ளனரா என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2 பேர் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற காட்சிகள் வெளியானது.

    அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். நகை திருட்டில் ஈடுபட்டது கரூர் மாவட்டம் நரசிம்மபுரத்தை சேர்ந்த பாலமுருகன்(48) மற்றும் அவரது 16 வயது மகன் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து 16 பவுன் நகை மற்றும் குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • 60 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் சேவை இல்லாமல் கிராம மக்கள் தீவில் வசிப்பது போல் இருந்து வருகின்றனர்.
    • பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 1½ கி.மீ தூரம் நடந்து சென்று பழனி ரோடு வந்து பஸ்ஸில் செல்லும் அவலநிலையில் தவித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது அணைப்பட்டி கிராமம் சுமார் 3000 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில், 1200 வாக்காளர்கள் மற்றும் 100 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் உள்ளனர்.

    இந்த கிராமத்தில் பெரும்பான்மை விவசாயிகள் உள்ளனர். மேலும் கொத்தனார் மற்றும் கட்டிட வேலைக்கு செல்லும் பணியாளர்கள் அதிகம் உள்ளனர். தொழில் மற்றும் படிப்புக்காக திண்டுக்கலை அதிகம் நாடி வருகின்றனர். இந்த கிராமத்தில் 50 ஏக்கருக்கு மேல் தென்னை, வாழை, நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகளின் படித்து வருகின்றனர்.

    கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் சேவை இல்லாமல் கிராம மக்கள் தீவில் வசிப்பது போல் இருந்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 1½ கி.மீ தூரம் நடந்து சென்று பழனி ரோடு வந்து பஸ்ஸில் செல்லும் அவலநிலையில் தவித்து வருகின்றனர். அவ்வப்போது வரும் ஷேர் ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் அதிகமான ஆட்களுடன் பயணம் செய்து வருகின்றனர்.

    இது குறித்து முன்னாள் நாட்டாமை காமாட்சி கூறுகையில் எனக்கு 65 வயதாகிறது. இதுவரை எங்கள் கிராமத்திற்கு பஸ் வந்ததே கிடையாது. 40 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை. அதை அவ்வப்போது பேஜ் ஒர்க் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் க்கு செல்வதற்கு நடந்தே குழந்தைகள் பெரியவர்கள் வரை நடந்தே செல்லும் நிலை உள்ளது. பள்ளி நேரங்களில் மட்டும் பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பஸ் சேவை இல்லாததால் இந்த கிராமம் தீவு போல் காட்சியளிக்கிறது. அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் கூட வர தாமதமாகிறது. எனவே விரைந்து இப்பகுதிக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கமிஷனர் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் முன்னிலையில், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது
    • தெரு நாய்கள் மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்கள் என மொத்தம் 25 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    உலக ரேபிஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலர்கள், விலங்குகள் நல அமைப்புகள் உட்பட உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், சுகாதார நீர் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவை ரேபிஸ் கட்டுப்பாடு மற்றும் பொறுப்பான செல்லப்பிராணிகளின் உரிமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்கள், தெரு நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்ட கால்நடை ஆஸ்பத்திரியில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் செபாஸ்டின் முன்னிலையில், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. தெரு நாய்கள் மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்கள் என மொத்தம் 25 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மேலும் செல்லப்பிராணிகளுடன் வந்த பொதுமக்கள் வெறிநாய் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், தங்கவேல், முகமது ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
    • மொத்தம் 66.70 மி.மீ மழை பதிவானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த கன மழையின் காரணமாக கொடைக்கானல் ரோஸ்கார்டன் 7.5, பழனி 4, நத்தம் 27, வேடசந்தூர் 2.4, புகையிலை நிலையம் 2.4, கொடைக்கானல் பூங்கா 23.2 என மொத்தம் திண்டுக்கல்லில் 66.70 மி.மீ மழை பதிவானது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மேலாண்மை துறை சார்பில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
    • கொடைக்கானலில் தொழில் முனையும் வாய்ப்புகளை மாணவர் கருத்தில் கொள்ளும்படி கருத்தரங்கில் கூறப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மேலாண்மை துறை சார்பில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு குறித்த கருத்தரங்கு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியை பதிவாளர் டாக்டர்ஷீலா தொடங்கி வைத்தார்.

    துணைவேந்தர் கலா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கொடை க்கானல் டிராவல் இன் ஹாலிடேஸ் நிர்வாக இயக்குனர் சார்லஸ் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீட்டின் தற்போதைய சூழ்நிலையை விளக்கினார். கொடை க்கானலில் சுற்றுலா துறையில் இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்று விளக்கினார்.

    கொடைக்கானலில் தொழில் முனையும் வாய்ப்புகளை மாணவர் கருத்தில் கொள்ளு ம்படி தனது உரையில் கூறினார். டிவி என்டர்டெ ய்னர் சதீஷ் மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைய ஊக்குவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு மேலாண்மை ஆய்வுத் துறைத் தலைவர் கீதா வரவேற்புரை வழங்கி னார். உதவி பேராசிரியை மல்லிகாநன்றி கூறினார்

    • சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
    • பஸ் நிலையத்தினுள் பஸ்கள் நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தின் சட்டம் ஒழுங்கை பேணி பராமரித்திடவும், பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதி செய்திடவும், மாநகரின் முக்கிய வீதிகளில் 2 சக்கரம் மற்றும் 4 சக்கர வாக னங்களை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி நிறுத்துவதற்கும், பஸ் நிலையத்தினுள் பஸ்கள் நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்கும், மேலும் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கு சங்கிலிகள் அமைத்து தனியாக இடம் ஒதுக்கி வாகனங்கள் நிறுத்துவதை கண்காணி க்கவும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்த ப்பட்ட அலுவல ர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சாலைகளில் வேகத்தடை கள், வாகனத்தடுப்புகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகளுடன் அமைக்க வேண்டும். மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும், ஒளிரும் ஒட்டுவில்லைகளை முக்கிய இடங்களில் அமைப்பதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்துகளை சீர்படுத்துவதற்கும் துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பொது மக்களிட மிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாகவும், கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சம்மந்தப்பட்ட அலுவல ர்களை அனுப்பி வைக்க வேண்டும். அரசு விதிமுறை களை பின்பற்றாமல் உள்ளவர்களை கண்டறிந்து காவல்துறையினர் நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    ×