என் மலர்
நீங்கள் தேடியது "Anaipatti village"
- 60 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் சேவை இல்லாமல் கிராம மக்கள் தீவில் வசிப்பது போல் இருந்து வருகின்றனர்.
- பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 1½ கி.மீ தூரம் நடந்து சென்று பழனி ரோடு வந்து பஸ்ஸில் செல்லும் அவலநிலையில் தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது அணைப்பட்டி கிராமம் சுமார் 3000 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில், 1200 வாக்காளர்கள் மற்றும் 100 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் உள்ளனர்.
இந்த கிராமத்தில் பெரும்பான்மை விவசாயிகள் உள்ளனர். மேலும் கொத்தனார் மற்றும் கட்டிட வேலைக்கு செல்லும் பணியாளர்கள் அதிகம் உள்ளனர். தொழில் மற்றும் படிப்புக்காக திண்டுக்கலை அதிகம் நாடி வருகின்றனர். இந்த கிராமத்தில் 50 ஏக்கருக்கு மேல் தென்னை, வாழை, நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகளின் படித்து வருகின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் சேவை இல்லாமல் கிராம மக்கள் தீவில் வசிப்பது போல் இருந்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 1½ கி.மீ தூரம் நடந்து சென்று பழனி ரோடு வந்து பஸ்ஸில் செல்லும் அவலநிலையில் தவித்து வருகின்றனர். அவ்வப்போது வரும் ஷேர் ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் அதிகமான ஆட்களுடன் பயணம் செய்து வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் நாட்டாமை காமாட்சி கூறுகையில் எனக்கு 65 வயதாகிறது. இதுவரை எங்கள் கிராமத்திற்கு பஸ் வந்ததே கிடையாது. 40 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை. அதை அவ்வப்போது பேஜ் ஒர்க் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் க்கு செல்வதற்கு நடந்தே குழந்தைகள் பெரியவர்கள் வரை நடந்தே செல்லும் நிலை உள்ளது. பள்ளி நேரங்களில் மட்டும் பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பஸ் சேவை இல்லாததால் இந்த கிராமம் தீவு போல் காட்சியளிக்கிறது. அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் கூட வர தாமதமாகிறது. எனவே விரைந்து இப்பகுதிக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






