என் மலர்
நீங்கள் தேடியது "Mother Teresa University"
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மேலாண்மை துறை சார்பில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
- கொடைக்கானலில் தொழில் முனையும் வாய்ப்புகளை மாணவர் கருத்தில் கொள்ளும்படி கருத்தரங்கில் கூறப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மேலாண்மை துறை சார்பில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு குறித்த கருத்தரங்கு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியை பதிவாளர் டாக்டர்ஷீலா தொடங்கி வைத்தார்.
துணைவேந்தர் கலா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கொடை க்கானல் டிராவல் இன் ஹாலிடேஸ் நிர்வாக இயக்குனர் சார்லஸ் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீட்டின் தற்போதைய சூழ்நிலையை விளக்கினார். கொடை க்கானலில் சுற்றுலா துறையில் இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்று விளக்கினார்.
கொடைக்கானலில் தொழில் முனையும் வாய்ப்புகளை மாணவர் கருத்தில் கொள்ளு ம்படி தனது உரையில் கூறினார். டிவி என்டர்டெ ய்னர் சதீஷ் மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைய ஊக்குவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு மேலாண்மை ஆய்வுத் துறைத் தலைவர் கீதா வரவேற்புரை வழங்கி னார். உதவி பேராசிரியை மல்லிகாநன்றி கூறினார்
- கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
- கவர்னர் வருகையை முன்னிட்டு 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக 56-வது பட்டமளிப்பு விழா இன்று மதியம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். பின்னர் கார் மூலம் காமராஜர் பல்கலைக்கழகம் சென்ற அவர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் இன்று மாலை கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்.
இன்று இரவு கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கும் ஆர்.என்.ரவி நாளை காலை சங்கரா பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின் நாளை காலை 11 மணிக்கு கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 31-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
அதன் பின் பிற்பகல் 3 மணிக்கு கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கவர்னர் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் 66 நக்சல் தடுப்பு பிரிவு படையினர் உள்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






