search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோடி பிரதமராக வேண்டும் என்பதைவிட அண்ணாமலை தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று செயல்படுகிறார் -முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு
    X

    முன்னாள் அமைச்சர் நத்தம்.இரா.விசுவநாதன்

    மோடி பிரதமராக வேண்டும் என்பதைவிட அண்ணாமலை தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று செயல்படுகிறார் -முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

    பழனி:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் பழனி ஆர்.எப். ரோடு பகுதியில் நடைபெற்றது. பழனி நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட பொருளாளருமான வேணுகோபாலு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    மாவட்ட அவைத்தலைவர் குப்புச்சாமி, முன்னாள் எம்.பி. குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பழனி நகர அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேசியதாவது,

    அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பா.ஜ.க. கூட்டணியில் இருந்த விலகியதை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து அனைவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. இறுதியில் பா.ஜ.க வேண்டவே வேண்டாம் என்ற கருத்தை கூறினர். அ.தி.மு.க. செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்தில் வளர்ந்து வந்த பா.ஜ.க, அ.தி.மு.க.வையே அழிக்க நினைக்கிறது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை. அவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வருகிறார்.

    கட்சிக்கு வந்து குறைந்த காலமே ஆன அவருக்கு முதல்வராக வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. "என் மண்' என அண்ணாமலை உரிமை கொண்டாட முடியாது. இந்த மண் தமிழ்நாட்டு மண். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வை முன்னிலைப்படுத்தி நடைபயணம் மேற்கொள்ளாமல் தமிழகத்தில் தன் பெயரை அனைவரும் சொல்ல வேண்டும் என்பதற்காக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது.

    அ.தி.மு.க தனது சுயமரியாதையை இழந்து, பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நம் மக்களின், தொண்டர்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு மத்தியில் பிரதமராக மோடியும், தமிழகத்தில் முதல்-அமைச்சராக அண்ணாமலை இருக்க வேண்டும் என்று பா.ஜ.க பேராசை படுகிறது. ஆனால் பா.ஜ.க எனும் வேண்டாத சுமையை தூக்கி எறிந்ததால் அ.தி.மு.க சுதந்திரமாக இருக்கிறது.

    தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மது கலாச்சாரத்தால் தி.மு.க மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 505 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றி விட்டு 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக தி.மு.க மக்களை ஏமாற்றி வருகிறது.

    பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வால் மத்திய அரசு மீதும், விலை வாசி உயர்வு காரணமாக தமிழகத்தில் தி.மு.க அரசு மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர் இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×