என் மலர்
திண்டுக்கல்
- அணைப்பட்டி சாலையில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்த போது தடுமாறி கீழே விழுந்தார்.
- படுகாயமடைந்த கல்லூரி மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் சக்கிலிய ப்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் மகன் முகேஸ்க ண்ணா (வயது18). இவர் ஆத்தூர் அரசு கூட்டுறவு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தனது சகோதரி செல்ல ம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க நிலக்ேகாட்டைக்கு பைக்கில் சென்றார். அணைப்பட்டி சாலையில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தார். அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தி னர் அவரை மீட்டு நிலக்கோ ட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்ட முகேஸ்க ண்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிர சாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய சாப்ட் வரவழைக்கப்பட்டு ரோப்காரில் பொருத்தப்பட்டது.
- காலை ரோப்காரில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் சிரமமின்றியும், எளிதாகவும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக அடிவாரத்தில் இருந்து 2½ நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு செல்லக்கூடிய ரோப் காரையே பெரும்பாலான பக்தர்கள் விரும்பிச் செல்கின்றனர்.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த ரோப்கார் சேவை மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது.
அதன்படி கடந்த 19.8.23-ந் தேதி பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பழுதடைந்த உதிரி பாகங்கள் மாற்றப்பட்டது. குறிப்பாக கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய சாப்ட் வரவழைக்கப்பட்டு ரோப்காரில் பொருத்தப்பட்டது.
பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் ரோப்காரில் உள்ள 8 பெட்டிகளுக்கும் புதிய வண்ணங்கள் தீட்டும் பணி நேற்று நடைபெற்றது. இன்று காலை ரோப்காரில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தில் போது பெட்டிகள் சீரான முறையில் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இயங்குகிறதா? என சரி பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை சென்னை ஐ.ஐ.டி. குழுவினரால் பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதா என உறுதி செய்யப்படும். அந்த குழுவினர் சான்றளித்தால் ஓரிரு நாளில் ரோப் கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்.எம்.காலனியில் இருந்து ரயில் தண்டவாளம் பாலம் கீழ் வழியாக வரும் கழிவுநீர் மழை காலங்களில் மழை நீருடன் கலந்து இந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது.
- எனவே மழை நீர், கழிவுநீர் வெளியே வராமல் அகலமான ஓடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மூவேந்தர் நகர், எ.எம்.ஜெ.எம்.நகர், சக்தி பாலாஜி நகர் பகுதிகள். இங்கு 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆர்.எம்.காலனியில் இருந்து ரயில் தண்டவாளம் பாலம் கீழ் வழியாக வரும் கழிவுநீர் மழை காலங்களில் மழை நீருடன் கலந்து இந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும் குடியிருப்புகளிலும் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது.
இதனால் சுகாதார கேட்டில் சிக்கி தவிப்பதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். கடந்த ஓராண்டாக கால்வாய் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் எங்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே மழைநீரோடு தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழை நீர், கழிவுநீர் வெளியே வராமல் அகலமான ஓடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திருடிச் சென்றனர்.
- புகாரின் பேரில் போலீசார் ஆடு திருடிய 2 பேரை கைது செய்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரியபித்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் சொந்தமாக ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் வீட்டு முன்பு கட்டி வைக்கப்பட்டு இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திருடிச் சென்றனர்.
இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஜெகதீஸ்வரன் புகார் அளித்தார். நேற்று இரவு ஆத்துமேடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்த னர்.
பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் ஆட்டு க்குட்டியை திருடியதை ஒத்துக் கொண்டனர். நாயக்கனூரைச் சேர்ந்த போஸ் (வயது32), தோப்பூரைச் சேர்ந்த ஜெயபாலாஜி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆட்டுக்குட்டியை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றனர்.
- புகாரின் பேரில் போலீசார் மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த டேவிட் மனைவி சேவியர் அஞ்சல்மேரி (வயது 60). இவர் தனது 2 வது மகள் வீட்டிற்கு சென்று விட்டு நிலக்கோட்டை- மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜிடம் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- மாட்டுச்சந்தை ஏலத் தொகை அதிகமாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்காததால் நகராட்சி நிர்வாகமே வாரச்சந்தையை நடத்தி வருகிறது.
- மாட்டுச்சந்தை ஏலம் 17-வது முறையாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வருகிறது. வியாழன் அன்று ஆட்டுச்சந்தை நடக்கும். இந்த சந்தைகளுக்கான ஒப்பந்த காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஏலத் தொகை அதிகமாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்காததால் நகராட்சி நிர்வாகமே வாரச்சந்தையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நகராட்சி கமிஷனர் மீனா தலைமையில் நடந்த மாட்டுச்சந்தை ஏலத்தில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மாட்டுச்சந்தையை ஏலம் எடுப்பதற்கு அரசு நிர்ணயித்த தொகை ரூ.1.40 கோடி என கமிஷனர் அறிவித்தார். இந்த தொகை அதிகமாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
இதனால் மாட்டுச்சந்தை ஏலம் 17-வது முறையாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல் மாட்டுச்சந்தை ஏலமும் 14-வது முறையாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
- 3 நாட்களாக பேரிஜம் ஏரியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட முடியாததால் தடை தொடரும் என தெரிவித்தனர்.
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளது. இதில் மிகவும் முக்கியமான பேரிஜம் ஏரியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே பயணம் செய்து கொண்டே இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம் என்பதால் பல்வேறு தரப்பினரும் இங்கு சென்று வருகின்றனர்.
பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இங்கு பேரிஜம் ஏரி மட்டுமல்லாது தொப்பி தூக்கும்பாறை, அமைதி பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலா இடங்களும் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வரும் காட்டுயானைகள் பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். 3 நாட்களாக அங்கு முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட முடியாததால் தடை தொடரும் என தெரிவித்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், கொடைக்கானலின் குளுமையும், அடர்ந்த வனப்பகுதி இயற்கை அழகையும் கண்டு ரசிக்க வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஆனால் பெரும்பாலான நேரங்களில் பேரிஜம் ஏரி செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. யானைகளை அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டாமல் வனத்துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர். அதற்கான நடவடிக்கை எடுக்காமல் யானைகள் வரும்போது சுற்றுலா பயணிகளுக்கு தடை என்றும், அவை தானாக அங்கிருந்து வெளியேறியதும் அனுமமதி அளித்து வருகின்றனர். இதனால் ஆர்வமுடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கும் யானைகள் படையெடுத்து வருகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சரியான நேரத்தில் பஸ்கள் சரியான நேரத்திற்கு இயங்காததால் மாணவ-மாணவிகள், கூலித்தொழிலாளர்கள் அவதியடைந்து வந்தனர்.
- முறைப்படி இயக்கப்படாத அரசு பஸ் இன்று காலை மொட்டைய கவுண்டன்ப ட்டிக்கு வந்தபோது சிறை ப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டைய கவுண்டன் பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டுமே உள்ளதால் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயில வேம்பார்பட்டி மற்றும் கோபால்பட்டிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இங்கு கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிப்பதால் தினமும் வேலை நிமித்தமாக ஏராள மான தொழிலாளர்கள் திண்டுக்கல்லுக்கு வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து சாணார்பட்டி, கோபா ல்பட்டி வழியாக மொட்டைய கவுண்டன்பட்டி கிராமத்துக்கு காலை 6.30, 9.05, 11.30, 1.30, 3.30, 5.30 இரவு 9 மணி ஆகிய நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் சரியான நேரத்திற்கு இயங்காததால் மாணவ-மாணவிகள், கூலித்தொழிலாளர்கள் அவதியடைந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வராததால் பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. பொதுமக்களும் பாதிப்பு அடைந்தனர். மேலும் ஒரு சில நேரங்களில் தொடர்ச்சியாக அரசு பஸ்கள் இயக்கப்படாமலே இருந்தன.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.இதனால் ஆத்திர மடைந்த பொது மக்கள் முறைப்படி இயக்கப்படாத அரசு பஸ் இன்று காலை மொட்டைய கவுண்டன்ப ட்டிக்கு வந்தபோது சிறை ப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார், போக்குவரத்து அதிகாரி, வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் சரியான நேரத்தில் தினமும் தொடர்ந்து அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உங்களது கோரிக்கைகள் மேல் அதிகாரிகளிடம் பேசி தீர்த்து வைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரி கூறியதின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.அரசு பஸ்சை ஒரு மணி நேரம் பொது மக்கள் சிறை பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கட்டாயமாக கனரக வாகனம் மற்றும் வேளாண்மை உபகரணங்களை வாங்க வேண்டும் என வற்புறுத்தல்.
- இதையடுத்து சாணார்பட்டி கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கட்டாயமாக கனரக வாகனம் மற்றும் வேளாண்மை உபகரணங்களை வாங்க வேண்டும் என வற்புறுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாணார்பட்டி பகுதியில் செயல்படும் 16 கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த செயலர்கள், அலுவலர்கள் சுமார் 80 பேர் அச்சங்கத்தின் சாணார்பட்டி பகுதி செயலாளர் மைக்கேல் ஆரோக்கியராஜ் தலைமையில் சாணார்பட்டி கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் கூட்டுறவு சங்க வழக்கமான பணிகள் நடைபெறாமால் பொதுமக்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், நகை கடன் பெற்றவர்கள் என பலர் பாதிக்கப்பட்டனர்.
- வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் அமைக்க ஆவண செய்ய ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.
- மழைக்காலம் வருவதால் யூனியன் உட்பட்ட பகுதிகளில் பள்ளிக் கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும்
வடமதுரை:
வடமதுரை யூனியன் அலுவலகத்தில் தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் தனலட்சுமி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கீதாராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாடியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செந்தில் மணிக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. பின்னர் வடமதுரை யூனியன் உட்பட்ட பகுதிகளில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் அமைக்க ஆவண செய்ய ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் கோரிக்கை வைத்தார். மலை கிராமமான மலைப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மழைக்காலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளதால், சீரமைக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் வெள்ளையன் கோரிக்கை வைத்தார்.
மழைக்காலம் வருவதால் யூனியன் உட்பட்ட பகுதிகளில் பள்ளிக் கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் என்று சுக்காம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி கோரிக்கை வைத்தார். பின்னர் கவுன்சிலர்களுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
- நகராட்சியில் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- ஒட்டன்சத்திரம் நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் படி 2 ஆண்டு அரையாண்டுக்கான அக்டோபர் 2020 முதல் மார்ச் 2024 வரை சொத்து வரியை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தினால் நிகர சொத்து வரியில் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும் 2023 மற்றும் 2024 முதல் அரையாண்டு ஏப்ரல் 2003 முதல் செப்டம்பர் 2021 வரை சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் ஒரு சதவீதம் வசூல் செய்யப்படும் வரிகளை தங்கள் இல்லம் தேடி வருகை தரும் நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்
எனவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரிகளை செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளுமாறு ஆணையாளர் மீனா தெரிவித்துள்ளார்.
- 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தொழிலாளி மீது அவரது மனைவி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயராஜ் (வயது 31). இவருக்கும் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்த சுகன்யா தேவி (வயது 28) என்பவருக்கும் கடந்த 17.05.2021 ஆம் ஆண்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது நகை மற்றும் சீர் வரிசை கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மேலும் 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டதாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா விசாரணை செய்து வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய ஜெயராஜ் மற்றும் தாயார் ஜெயலட்சுமி ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தார்.






