17-வது முறையாக ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தை ஏலம் ஒத்தி வைப்பு

மாட்டுச்சந்தை ஏலத் தொகை அதிகமாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்காததால் நகராட்சி நிர்வாகமே வாரச்சந்தையை நடத்தி வருகிறது.மாட்டுச்சந்தை ஏலம் 17-வது முறையாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வருகிறது. வியாழன் அன்று ஆட்டுச்சந்தை நடக்கும். இந்த சந்தைகளுக்கான ஒப்பந்த காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஏலத் தொகை அதிகமாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்காததால் நகராட்சி நிர்வாகமே வாரச்சந்தையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நகராட்சி கமிஷனர் மீனா தலைமையில் நடந்த மாட்டுச்சந்தை ஏலத்தில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மாட்டுச்சந்தையை ஏலம் எடுப்பதற்கு அரசு நிர்ணயித்த தொகை ரூ.1.40 கோடி என கமிஷனர் அறிவித்தார். இந்த தொகை அதிகமாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

இதனால் மாட்டுச்சந்தை ஏலம் 17-வது முறையாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல் மாட்டுச்சந்தை ஏலமும் 14-வது முறையாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com