என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டு வருகிறது. கடை உரிமையாளர்கள், அளவுக்கு மீறி கடைகளின் எல்லையை கடந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
    • பஸ் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகளின் திடீர் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையம், மதுரை, திருச்சி, கரூர், திருப்பூர் ஆகிய தொழில் மாநகர ங்களை இணைக்கும் பெரும் பாலமாக இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வர்த்தக ரீதியாகவும் சுற்றுலா தளத்திற்கு செல்வ தற்காகவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் பஸ் நிலையமாக அமைந்துள்ளது.

    இந்த பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள், அளவுக்கு மீறி கடைகளின் எல்லையை கடந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நடந்து செல்ல பெரிய இடையூறு ஏற்பட்டு வருகிறது. ஆக்கிர மிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பல்வேறு புகார்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் அளிக்கப்பட்டு வந்தது.

    இதனை அடுத்து மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அலுவ லர்கள் மற்றும் ஊழியர்கள் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மதுரை, சேலம், நத்தம், தேனி ஆகிய பஸ்கள் நிறுத்தும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பஸ் நிலை யத்தில் நடந்த திடீர் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திண்டுக்கல்லில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சீலப்பாடி முருகன் நகரை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி திவ்யா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்களாக குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திவ்யா அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தகவல் தெரிவித்தனர்.

    திண்டுக்கல் அடுத்த மா.மு.கோவிலூர் முண்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். இவரது மனைவி பச்சைய ம்மாள் (22). வீட்டில் தனியாக இருந்த பச்சைய ம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பாலசுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    மேலும் திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கனரக வாகனம் மற்றும் வேளாண்மை உபகரண ங்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • 5 நாட்களாக தொடர் விடுமுறை எடுத்து அலுவலக பணியை புறக்கணித்து போராடி வருவதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கனரக வாகனம் மற்றும் வேளாண்மை உபகரண ங்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர் சங்கத்தினர் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நிலக்கோட்டை பகுதியிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை டாக்பியா சங்கம் ஒன்றிய செயலாளர் மதிவாணன் கூறுகையில்,

    திருச்சியில் நடந்த சங்க மாநாட்டில் முடிவுகளின் படி கடந்த 5 நாட்களாக தொடர் விடுமுறை எடுத்து அலுவலக பணியை புறக்கணித்து போராடி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. எனவே வருகிற 9ம் தேதிமுதல் போராட்ட த்தை தீவிரபடுத்த உள்ளோம். நெல்லை, மதுரை, திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, வேலூர் என தமிழகத்தில் உள்ள 7 மண்டலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இதில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் இ-சேவை மைய பணிகள் பாதிக்க ப்பட்டது.

    • 3-ம் சனிக்கிழமையான இன்று அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பெருமாள் கோவில்களில் நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி 3-ம் சனிக்கிழமையான இன்று அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பரிவார தெய்வங்களுக்கும் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுக்காம்பட்டியில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில் திருவேங்கட மலையப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சுக்காம்பட்டி சித்தர் ஸ்ரீலஸ்ரீ துரை ஆதித்தன் சாமிகள் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கி ஆசி வழங்கினார்.

    இதேபோல் மலையடிவாரம் சீனிவாசபெருமாள், வடமதுரை சவுந்திரராஜபெருமாள், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கபெருமாள், கோபிநாதசாமி கோவில், வி.மேட்டுப்பட்டி பேசும்பெருமாள், சன்னதிதெரு ஆஞ்சநேயர்கோவில், சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர், நாகல்நகர் வரதராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றன.

    நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவிகள், 500 மாணவிகள் என மொத்தம் 1000 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2697 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

    திண்டுக்கல்:

    தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு வசதியாக உதவி தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இதற்காக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் 500 மாணவிகள், 500 மாணவிகள் என மொத்தம் 1000 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    பிளஸ்-1 முதல் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திறனாய்வு தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2697 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

    திண்டுக்கல்லில் 6 தேர்வு மையங்களும், பழனியில் 5 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணிமுதல் மதியம் 12 மணிவரை முதல் தாளுக்கான தேர்வும், மதியம் 2 மணிமுதல் 4 மணிவரை 2-ம் தாளுக்கான தேர்வும் நடத்தப்பட்டது. இந்த தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் ஆசிரியர்கள் கண்காணிப்பு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    • ஸ்டாப்பில் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த வாலிபர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லை வீசி உடைத்தார்.
    • புகாரின்பேரில் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் அப்துல்சலாம். இவரது மகன் ராஜாமுகமது(35). இவர் திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடிக்கு சென்ற அரசு பஸ்சில் நத்தத்தில் ஏறி ஏரக்காபட்டிக்கு டிக்கெட் எடுத்துள்ளார்.

    ஆனால் பஸ் அங்கே நிற்காமல் சமுத்திராபட்டி பகுதியில் போய் நின்றது. இதில் ஆத்திரமடைந்த ராஜாமுகமது பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லை வீசி உடைத்தார். இச்சம்பவம் குறித்து டிரைவர் நத்தம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாமுகமதுவை கைது செய்தனர்.

    • பள்ளி மாணவர்கள் வியாபாரயுக்திகளை கற்றுக்கொள்ள வணிகத் திருவிழா நடைபெற்றது.
    • மாணவ விற்பனையாளர்கள் அதிக லாபம் ஈட்டியதுடன் வியாபார உத்திகளையும் கற்றுக் கொண்டனர்.

    நத்தம்:

    செந்துறை அருகே அய்யனார்புரம் கள்ளழகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் வியாபாரயுக்திகளை கற்றுக்கொள்ள வணிகத் திருவிழா நடைபெற்றது. விழாவினை பள்ளி முதல்வர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 30க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து விற்பனை அங்காடிகளை அமைத்திருந்தனர். அந்த அங்காடிகளில் பாரம்பரிய உணவு வகைகள், விதைகள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

    இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாணவ விற்பனையாளர்கள் அதிக லாபம் ஈட்டியதுடன் வியாபார உத்திகளையும் கற்றுக் கொண்டனர்.

    • கொடைக்கானலில் வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டது.
    • அன்னை தெரசா பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டது. கொடைக்கானல் ஏரிச்சாலை முகப்பில் வன உயிரின வார விழாவை சிறப்பிக்கும் வகையில் அன்னை தெரசா பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமை தாங்கினார்.

    கொடைக்கானல் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், ரேஞ்சர்கள் சிவக்குமார், செந்தில்குமார், சுரேஷ், முத்துராமலிங்கம், குமரேசன், பாலகிருஷ்ணன், அழகுராஜா மற்றும் சமூக ஆர்வலர்கள் மோகன், வீரா, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள், அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வன உயிரின வார விழா சைக்கிள் பேரணி ஏரி சாலை முழுவதும் சுற்றி நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது.

    சைக்கிள் பேரணியில் வனத்தை பாதுகாப்பது மரம் வளர்ப்பது அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை அணிந்தபடி மாணவிகள் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்திருந்தனர். நாளை (8ந் தேதி) வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, பைன்பாரஸ்ட், ேமாயர்பாய்ண்ட், தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் ெதாடங்கி உள்ளனர். சுற்றுலா தலங்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • 3-வது மின்இ ழுவை ரெயில் பழுதடைந்த நிலையில் அதற்கு பதிலாக புதிய மின்இழுவை ரெயில் வாங்க முடிவு செய்ய ப்பட்டது.
    • 8 மாதமாக இன்னும் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்ற னர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், யானை ப்பாைத வழியாக வும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலமாக கோவிலுக்கு செல்கின்றனர்.

    படிப்பாதையில் 50 சதவீத பக்தர்களே செல்லும் நிலையில் வயதான முதிய வர்கள், மாற்றுத்திறனா ளிகள், குழந்தைகள் ஆகியோர் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கடந்த 30 வருடத்திற்கு முன்பாக தேவஸ்தானம் சார்பில் 3 மின்இழுவை ரெயில் வாங்கி செயல்பாட்டுக்கு வந்தது.

    இதில்3-வது மின்இ ழுவை ரெயில் பழுதடைந்த நிலையில் அதற்கு பதிலாக புதிய மின்இழுவை ரெயில் வாங்க முடிவு செய்ய ப்பட்டது. அதன்படி பழைய மின்இழுவை ரெயிலை மாற்றிவிட்டு 72 பேர் பயணம் செய்யும் வகையில் மின்இழுவை ரெயில் வடிவமைக்கப்பட்டது. இந்த ரெயிலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது இந்த ரெயில் பக்தர்களை இழுத்து செல்லும் வகையில் திறனற்றதாக உள்ளது என தெரிவித்தது. முழுமையான பணிகளை செய்த பிறகு தரச்சான்று பெற்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கியது. இதனால் 3-வது மின்இழுவை ரெயில் கடந்த 8 மாதமாக இன்னும் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. ஏற்கனவே ரோப்கார் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இயக்கப்படாமல் உள்ள நிலையில் தற்போது தான் அதன்பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    தற்போது 2 மின்இழுவை ரெயில் மட்டுமே இயக்க ப்பட்டு அதில் தலா 36 பேர் வீதம் 72 பேர் மலைக்கோவி லுக்கு சென்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மின்இழுவை ரெயிலில் செல்ல காத்து கிடக்கின்றனர். காலையில் ரெயில்நிலையத்திற்கு வந்தால் மதியத்திற்கு பிறகுதான் ரெயிலில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கோவி லுக்கு சென்று சாமிதரிசனம் செய்யும் பக்தர்கள் மிகுந்த சோர்வடைந்து விடுகின்ற னர்.

    மின்இழுவை ரெயில் இயக்கப்படாததால் கோவில் நிர்வாகத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கார்த்திகை, மார்கழி, தைப்பூசம் என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வர உள்ள நிலையில் பழனிகோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே அதற்கு முன்பாக மின்இழுவை ரெயிலை இயக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • 16 வகையான அபிஷேக ங்கள், சிறப்பு பூஜை கள்மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடை பெற்றது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு சவுந்தர ராஜ பெருமாள் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகாசன பைரவருக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ங்கள், சிறப்பு பூஜை கள்மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடை பெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள் வாசு, கேப்டன் பிரபாகரன்,

    சுசீலா ராமானுஜம், கோவில் செயல் அலுவலர் முருகன், பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் செய்து இருந்தனர். பைரவர் பூஜைக்கு வந்த பக்தர்களுக்கு அறங்காவலர் குழுவினர்கள் மற்றும்கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு எவ்வாறு உருவாகிறது என்று கண்காட்சி நடத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. தேங்கும் மழைநீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அதிகளவு உற்பத்தி ஆகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக இன்று திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு எவ்வாறு உருவாகிறது அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கம் மற்றும் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த முகாமில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேயர் இளமதி பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்பொழுது ஒருவருக்கு கூட டெங்கு காய்ச்சல் கிடையாது.

    மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தான் வீட்டில் மாணவர்கள் டெங்கு ஒழிப்பினை பெற்றோர்களுக்கு எடுத்து கூறி முறையாக செயல் படுத்துவார்கள். அதனால் தான் மாணவர்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைய மாணவர்கள் பங்கு முக்கியமானது. நாட்டை பாதுகாப்பது மாணவர்களின் கடமை போல், டெங்கு தடுப்பு விழிப்புணர்விலும் மாணவர்களின் கடமை இன்றியமையானது என பேசினார் .

    இதில் மாநகர நல அலுவலர் செபாஸ்டின், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஜான் பீட்டர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாலிபரின் ஊனத்தை சுட்டிக்காட்டி திட்டி அவரை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் மாற்றுத்திறனாளியை தாக்கிய வாலிபரை கைது செய்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே செங்குறிச்சி தேவேந்திர புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது34). மாற்றுத்திறனாளி. இவர் தனது வீட்டின் முன்பு 3 சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பழனிச்சாமி, முருகன் ஆகியோர் லாரியை ஓட்டிச்செல்ல வேண்டும். வண்டியை எடுங்கள் என கூறி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஊனத்தை சுட்டிக்காட்டி திட்டியும் அவரை தாக்கியும் உள்ளனர்.

    இது குறித்து வடமதுரை ேபாலீசில் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

    பாடியூர் கருவேப்பிலை தோட்டத்தை சேர்ந்தவர் குயிலி(38). இவரது மாம னார் கருப்பண்னனுக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவ த்தன்று அவர்கள் நிலத்தில் ராமகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் உழவு பணி மேற்கொண்டனர்.

    இதனை கருப்பணன் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயம் அடைந்த கருப்பணன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் குயிலியையும் தாக்கி திட்டி உள்ளனர். இது குறித்து வடமதுரை போலீசில் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

    ×