என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • நேற்று மாலை 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் மாறினார்.
    • நட்சத்திர பரிகார அபிஷேகம் மற்றும் ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, ராகு, கேது பகவானுக்கு மகா தீபாராதனைகள் நடந்தது.

    நத்தம்:

    நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. இதில் நேற்று மாலை 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் மாறினார்.

    இதையொட்டி நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் உள்ள ராகு, கேது, பகவானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நட்சத்திர பரிகார அபிஷேகம் மற்றும் ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, ராகு, கேது பகவானுக்கு மகா தீபாராதனைகள் நடந்தது.

    இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நத்தம் ராம்சன்ஸ் பள்ளியில் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்
    • இதில் கண்புரை, கண் எரிச்சல், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு லென்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் ராம்சன்ஸ் பள்ளியில் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு பள்ளித் தாளாளர் ராமசாமி தலைமை தாங்கினார்.

    ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.இதில் கண்புரை, கண் எரிச்சல், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு லென்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது.முகாமில் டாக்டர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • வடக்கியூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித சந்தியாகப்பர் தேவாலயம் அமைந்துள்ளது.
    • கோவிலுக்கு முன்பாக மெழுகுவர்த்தி வைக்கும் இடத்தில் அருகே புதிதாக நீரூற்று வந்தபடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டி வடக்கியூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித சந்தியாகப்பர் தேவாலயம் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதத்தின் 2-ம் புதன்கிழமை மாலையில் சிறப்பு நவநாள் திருப்பலியும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இன்று தேதி காலை சுமார் 7 மணி அளவில் கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவிலுக்கு முன்பாக மெழுகுவர்த்தி வைக்கும் இடத்தில் அருகே புதிதாக நீரூற்று வந்தபடி இருந்தது. இதனை அடுத்து அந்த ஊரைச் சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் தகவல் கொடுத்தனர்.

    இத்தகவல் சுற்றுப் பகுதியில் பரவியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஊற்று வந்த இடத்தை பார்வையிட்டு வணங்கி செல்கின்றனர்.

    • அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இத்திட்டங்களை செயல்படுத்திட நிதி உதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் அரசுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • 4 பிரிவுகளில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ், அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இத்திட்டங்களை செயல்படுத்திட நிதி உதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் அரசுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்த தெருவில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்க நிதி உதவி, காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி கொள்முதல் செய்வதற்கு நிதி உதவி வழங்குதல்,

    வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்த தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு நிதி உதவி வழங்குதல், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ஆதரவற்ற தெரு நாய்கள், விலங்குகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதி உதவி வழங்குதல் ஆகிய மேற்கண்ட 4 பிரிவுகளில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • ஆன்லைன் பார்சலில் சுடிதாருக்கு பதிலாக கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டின் ஒரு பகுதி மட்டும் இருந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார்.
    • பார்சலில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும்.ஆன்லைனில் பதிவு செய்து பொருட்கள் வாங்கும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

    குள்ளனம்பட்டி:

    அனைத்து தரப்பு மக்களிடமும் செல்போன் இருப்பதால் ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்வது அதிகரித்து உள்ளது.இதனால் ஆன்லைன் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.இவ்வாறு ஆர்டர் செய்யும் பொருட்கள் பார்சலில் வீடுகளுக்கே வந்து விடுவதால்,பலர் ஆர்டர் செய்து வருகிறார்கள்.திண்டுக்கல் அனுமந்த நகரை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஒரு சுடிதாரை பார்த்தார்.உடனே அதை வாங்குவதற்காக ஆர்டர் செய்தார்.அவருக்கு நேற்று அந்த சுடிதார் வந்து சேரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு பார்சல் வந்தது.உடனே அவர் தான் ஆர்டர் செய்த சுடிதார் வந்து உள்ளது என்று நினைத்து அதை வாங்கி ஆவலுடன் பிரித்தார்.அப்போது பார்சலில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டின் ஒரு பகுதி மட்டும் இருந்தது.இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர், அந்த பார்சலை கொண்டு வந்த நபரிடம் கேட்டார்.அதற்கு அவர் எனக்கு பார்சலை உங்கள் முகவரிக்கு கொண்டு கொடுக்கும் வேலைதான்.

    ஆனால் அதில் வந்தது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.உடனே அவர் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மைய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.ஆனால் அவர்கள் உரிய பதிலை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, பார்சலில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும்.ஆன்லைனில் பதிவு செய்து பொருட்கள் வாங்கும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

    • காமலாபுரம் மற்றும் சக்கையநாயக்கனூர் பகுதியில் சீரான மின் வினியோகம் இல்லை. மேலும் குடிநீரும் சரியான முறையில் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
    • மறியலால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காமலாபுரம், சக்கையனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு காமலாபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது இந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காமலாபுரம் மற்றும் சக்கையநாயக்கனூர் பகுதியில் சீரான மின் வினியோகம் இல்லை. மேலும் குடிநீரும் சரியான முறையில் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    இதுகுறித்து அதிகாரிகளி டம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்ைல.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று செம்பட்டி-கொடைரோடு செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா, கருப்பையா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    அதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சீரான மின்வினியோகம் மற்றும் குடிநீர் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்தசம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • நிலக்கோட்டை பகுதியி கடந்த மாதம் பெய்த மழைக்கு விவசாயிகள் உழவு பணி செய்து சாகுபடி செய்தனர்.
    • மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை, சீத்தாபுரம், விராலிப்பட்டி, என். ஊத்துப்பட்டி, மிளகாய் பட்டி, என். ஆண்டிபட்டி, கோடாங்கி நாயக்கன் பட்டி, கோட்டூர், பிள்ளையார் நத்தம், குளத்துப்பட்டி, வீலி நாயக்கன்பட்டி, கரட்டூர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் மானாவாரி பயிர்களான கம்பு, சோளம், உளுந்து, துவரை, இரும்புச் சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கடந்த மாதம் பெய்த மழைக்கு விவசாயிகள் உழவு பணி செய்து சாகுபடி செய்தனர்.

    தற்போது பச்சை பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியாக வளர்ந்த நிலையில் உள்ளது. ஆனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் சரிவர மலை பெய்யாததால் மானாவரி பயிர்களாக சாகுபடி செய்த பயிர்கள் விளைவதற்கு போதிய தண்ணீர் இல்லை. மானாவாரி பயிர்கள் வளர வேண்டும் என்றால் வருணபகவான் கருணை காட்ட வேண்டும்.

    எனவே மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். மன்னவனூர், பூம்பாறை, பூண்டி உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கும் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
    • மோயர் பாயிண்ட் பகுதியில் திடீரென காட்டுயானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த கடைகளை உடைத்து சூறையாடியது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏரா ளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது ஆப்சீசன் நடைபெற்று வருகிறது. இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் வடமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட புதுமண தம்பதியினர் வரதொடங்கி உள்ளனர்.

    மேலும் வாரவிடுமுறை என்பதால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, மோயர்பாயிண்ட், குணாகுகை, பைன் பாரஸ்ட், தூண்பாறை, பிரையண்ட் பார்க், செட்டியார் பார்க், ரோஜா பார்க் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நகர மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.

    ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். மன்னவனூர், பூம்பாறை, பூண்டி உள்ளிட்ட மேல்மலைகிராமங்களுக்கும் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

    இந்த நிலையில் மோயர் பாயிண்ட் பகுதியில் திடீரென காட்டுயானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த கடைகளை உடைத்து சூறையாடியது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்தனர். பின்னர் பேரிஜம் பகுதிக்கு யானைகள் சென்றதால் நிம்மதி அடைந்தனர். அதனைதொடர்ந்து மோயர் பாயிண்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று மீண்டும் இங்கு வந்த யானைகள் மற்றொரு கடைையயும் சேதப்படுத்தியது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வில்லை. பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்தால் தடை என்றும், அதன்பின்னர் யானைகள் சென்றதும் அனுமதி அளிக்கின்றனர். எனவே யானைகளை நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 9-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நத்தம்:

    நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 9-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை நத்தம், அய்யாபட்டி, மெய்யம்பட்டி, மூங்கில்பட்டி, சிறுகுடி, பூசாரிபட்டி, பன்னியாமலை,நல்லகண்டம், உலுப்பகுடி,

    சமுத்திராபட்டி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • ரோப்கார் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.
    • 50 நாட்களுக்கு பின்னர் ரோப்கார் மீண்டும் இயங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், யானைப்பாதை வழியாகவும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலமாக கோவிலுக்கு செல்கின்றனர்.

    ரோப்கார் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. ரோப்கார் பெட்டி, உபகரணங்கள், சாப்ட் எந்திரம் ஆகியவை கழற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் எடைக்கற்கள் மற்றும் பஞ்சாமிர்த பெட்டிகள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்குழு ரோப்காரை இயக்கி ஆய்வு செய்தனர். அதில் திருப்தி ஏற்பட்டதைதொடர்ந்து இன்றுமுதல் ரோப்கார் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை ரோப்கார் பெட்டிகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

    50 நாட்களுக்கு பின்னர் ரோப்கார் மீண்டும் இயங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் மலைக்கோவில், அடிவாரம், கிரிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.

    மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரோப்கார் மீண்டும் இயக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இதேபோல் மின்இழுவை 3-வது ரெயில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கார் இருப்பதால் உரிமைத்தொகை கிடையாது என வந்த தகவலை பார்த்து கணவன்-மனைவி அதிர்ச்சி அடைந்தனர்.
    • குறுந்தகவலை ஆதாரமாக கொண்டு வடிவேலு சினிமா பட பாணியில் தனது காரை காணவில்லை என தென்கரை போலீசில் புகார் அளித்தார்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. பல ஊர்களில் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

    இதனைதொடர்ந்து மீண்டும் முகாம்கள் அமைத்து பயனாளிகள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் இதுவரை 7 லட்சம் வரையிலான மனுக்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மனு நிராகரிக்கப்பட்டது. கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷீலா மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பம் வழங்கி இருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு குறுந்தகவல் வந்தது.

    ஆனால் அதில் வந்த தகவலை பார்த்துதான் ஷீலா மற்றும் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தனர். உங்களிடம் கார் இருப்பதால் உரிமைத்தொகை கிடைக்காது என தகவல் வந்தது. தன்னிடம் சைக்கிள் கூட இல்லை என்றும், தனக்கு எப்படி கார் வந்தது என ராமமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் தனக்கு வந்த குறுந்தகவலை ஆதாரமாக கொண்டு வடிவேலு சினிமா பட பாணியில் தனது காரை காணவில்லை என தென்கரை போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் வருவாய்த்துறையினர் தன்னிடம் கார் இருப்பதாக சான்றளித்து உள்ளனர். ஆனால் தற்போது அந்த காைர காணவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என தெரியாமல் தென்கரை போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதுகுறித்து தாசில்தார் அர்ஜூனனிடம் கேட்டபோது மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தில் ஒருசிலருக்கு இதுபோன்ற பிழையுடன் குறுந்தகவல் வருவதாகவும், மீண்டும் அவர்கள் விண்ணப்பித்தால் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலைக்குத்தான் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும்.
    • கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வருகை தந்தார். தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது ஆவின் நிர்வாகம் எந்த ஒளிவு மறைவின்றி வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை தொடர்ந்து சரி செய்து வருகிறோம். குறிப்பாக மார்க்கெட்டிங் பிரச்சனைகளை சீர் செய்ததன் காரணமாக தற்போது 8 சதவீத விற்பனை அதிகரித்து உள்ளது.

    இந்த மாதம் கணக்கிட்டு பார்த்தால் மேலும் கூடுதலாக வாய்ப்பு உள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலைக்குத்தான் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி விற்பனையாளர்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.

    தமிழகத்தை பொறுத்தவரை ஆவின் மூலம் கையாளப்படுகின்ற பால் மற்றும் பால் பொருட்கள் கையாளுகின்ற அளவினை பெருக்குவதற்காக பல்வேறு பகுதிகளில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    எனவே ஆவின் கொள்முதலை கையாள்வதற்கான திட்டங்கள் தொலைநோக்கு பார்வையோடு மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களுக்கு பல லட்சக்கணக்கான கறவை மாடுகள் புதிதாக வாங்குவதற்கு குறைந்த வட்டியில் வங்கி கடனுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களுடைய தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

    தற்பொழுது பட்டர், ஐஸ்கிரீம், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்கள் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயிகளுக்கு தேவையான கடன் உதவி மானியங்களில் வங்கி மூலம் குறைந்த வட்டிக்கு கடனும் பெற்றுத் தந்து வருகிறோம். நாட்டு இன மாடுகள் அழிந்து கொண்டு இருக்கிறது.

    இதனையடுத்து நாட்டு இன மாடுகளை விவசாயிகளுக்கு கண்டறிந்து கொடுக்க வேண்டி உள்ளது. இது எல்லாம் எங்கள் திட்டங்களில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×