என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிசய நீரூற்று உருவான இடம்.
உலகம்பட்டி தேவாலயத்தில் அதிசய நீரூற்று
- வடக்கியூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித சந்தியாகப்பர் தேவாலயம் அமைந்துள்ளது.
- கோவிலுக்கு முன்பாக மெழுகுவர்த்தி வைக்கும் இடத்தில் அருகே புதிதாக நீரூற்று வந்தபடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டி வடக்கியூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித சந்தியாகப்பர் தேவாலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதத்தின் 2-ம் புதன்கிழமை மாலையில் சிறப்பு நவநாள் திருப்பலியும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இன்று தேதி காலை சுமார் 7 மணி அளவில் கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவிலுக்கு முன்பாக மெழுகுவர்த்தி வைக்கும் இடத்தில் அருகே புதிதாக நீரூற்று வந்தபடி இருந்தது. இதனை அடுத்து அந்த ஊரைச் சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் தகவல் கொடுத்தனர்.
இத்தகவல் சுற்றுப் பகுதியில் பரவியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஊற்று வந்த இடத்தை பார்வையிட்டு வணங்கி செல்கின்றனர்.
Next Story






