நத்தத்தில் இலவச மருத்துவ முகாம்

நத்தம் ராம்சன்ஸ் பள்ளியில் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் இதில் கண்புரை, கண் எரிச்சல், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு லென்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாம் நடைபெற்றது.
Published on

நத்தம்:

நத்தம் ராம்சன்ஸ் பள்ளியில் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு பள்ளித் தாளாளர் ராமசாமி தலைமை தாங்கினார்.

ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.இதில் கண்புரை, கண் எரிச்சல், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு லென்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது.முகாமில் டாக்டர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com