செந்துறை அருகே பள்ளி மாணவர்களின் வணிக திருவிழா

பள்ளி மாணவர்கள் வியாபாரயுக்திகளை கற்றுக்கொள்ள வணிகத் திருவிழா நடைபெற்றது. மாணவ விற்பனையாளர்கள் அதிக லாபம் ஈட்டியதுடன் வியாபார உத்திகளையும் கற்றுக் கொண்டனர்.
பாரம்பரிய உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காட்சி.
பாரம்பரிய உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காட்சி.
Published on

நத்தம்:

செந்துறை அருகே அய்யனார்புரம் கள்ளழகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் வியாபாரயுக்திகளை கற்றுக்கொள்ள வணிகத் திருவிழா நடைபெற்றது. விழாவினை பள்ளி முதல்வர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

விழாவில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 30க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து விற்பனை அங்காடிகளை அமைத்திருந்தனர். அந்த அங்காடிகளில் பாரம்பரிய உணவு வகைகள், விதைகள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாணவ விற்பனையாளர்கள் அதிக லாபம் ஈட்டியதுடன் வியாபார உத்திகளையும் கற்றுக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com