search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 Centers"

    • திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவிகள், 500 மாணவிகள் என மொத்தம் 1000 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2697 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

    திண்டுக்கல்:

    தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு வசதியாக உதவி தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இதற்காக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் 500 மாணவிகள், 500 மாணவிகள் என மொத்தம் 1000 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    பிளஸ்-1 முதல் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திறனாய்வு தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2697 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

    திண்டுக்கல்லில் 6 தேர்வு மையங்களும், பழனியில் 5 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணிமுதல் மதியம் 12 மணிவரை முதல் தாளுக்கான தேர்வும், மதியம் 2 மணிமுதல் 4 மணிவரை 2-ம் தாளுக்கான தேர்வும் நடத்தப்பட்டது. இந்த தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் ஆசிரியர்கள் கண்காணிப்பு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    ×